Friday 17 June 2022

ஜெய ஜனார்த்தனா கிருஷ்ணா

 

ஜெய ஜனார்த்தனா கிருஷ்ணா ராதிகா பதே 


ஜெய ஜனார்த்தனா கிருஷ்ணா ராதிகா பதே 
ஜன விமோசனா கிருஷ்ணா ஜென்ம மோசனா
கருடவாகன கிருஷ்ணாகோபிகாபதே
நயன மோகனா கிருஷ்ணா நீரஜீக்ஷனா
ஜெய ஜனார்த்தனா கிருஷ்ணா ராதிகா பதே 
ஜன விமோசனா கிருஷ்ணா ஜென்ம மோசனா

சுஜனபாந்தவா கிருஷ்ணா சுந்தராக்ருதே
மதன கோமளா கிருஷ்ணா மாதவாஹரி
வசுமதிபதே கிருஷ்ணா வாசவானுஜா
வரகுணாகரா கிருஷ்ணா வைஷ்ணவா க்ருதே
ஜெய ஜனார்த்தனா கிருஷ்ணா ராதிகா பதே 
ஜன விமோசனா கிருஷ்ணா ஜென்ம மோசனா

சுருசிரானனா கிருஷ்ணா ஷௌர்யவாரிதி
முரஹராவிபோ கிருஷ்ணா முக்திதாயக
விமலபாலகா கிருஷ்ணா வல்லபிபதே
கமலலோசனா கிருஷ்ணா காம்யதாயக
ஜெய ஜனார்த்தனா கிருஷ்ணா ராதிகா பதே 
ஜன விமோசனா கிருஷ்ணா ஜென்ம மோசனா
விமலபாலகா கிருஷ்ணா
வல்லபீபதே
கமலலோசனா கிருஷ்ணா காம்யதாயகா
விமலகாத்ரனே கிருஷ்ணா பக்தவத்ஸலா
சரணபல்லவம் கிருஷ்ணா கருணகோமலம்
ஜெய ஜனார்த்தனா கிருஷ்ணா ராதிகா பதே 
ஜன விமோசனா கிருஷ்ணா ஜென்ம மோசனா

புவனநாயகா கிருஷ்ணா

பாவனாக்ருதே

குணகணோஜ்வலா கிருஷ்ணா
நளினலோசனா
ப்ரணயவாரிதே கிருஷ்ணா
குணகணாகரா
ஸ்யாமஸோதரா கிருஷ்ணா தீனவத்ஸலா
ஜெய ஜனார்த்தனா கிருஷ்ணா ராதிகா பதே 
ஜன விமோசனா கிருஷ்ணா ஜென்ம மோசனா

காமசுந்தரா கிருஷ்ணா பாஹிசர்வத
நரகநாசன கிருஷ்ணா நரசஹாயக
தேவகீஸுதா கிருஷ்ணா காருண்யாம்புதே
கம்ஸனாஸனா கிருஷ்ணா த்வாரகாஸ்திதா
ஜெய ஜனார்த்தனா கிருஷ்ணா ராதிகா பதே 
ஜன விமோசனா கிருஷ்ணா ஜென்ம மோசனா

பாவனாத்மகா கிருஷ்ணா தேஹி மங்களம்
த்வத்பதாம்புஜம் கிருஷ்ணா ஸ்யாமகோமலம்
பக்தவத்ஸலா கிருஷ்ணா காம்யதாயகா
பாலிஸன்னநூ கிருஷ்ணா ஶ்ரீஹரீ நமோ
ஜெய ஜனார்த்தனா கிருஷ்ணா ராதிகா பதே 
ஜன விமோசனா கிருஷ்ணா ஜென்ம மோசனா

பக்ததாஸனா கிருஷ்ணா ஹரஸுனீ ஸதா
காதுனிந்தினா கிருஷ்ணா ஸலஹயாவிபோ
கருடவாகனா கிருஷ்ணா கோபிகாபதே
நயன மோகனா கிருஷ்ணா நீரஜேக்ஷணா
ஜெய ஜனார்த்தனா கிருஷ்ணா ராதிகா பதே 
ஜன விமோசனா கிருஷ்ணா ஜென்ம மோசனா

Sunday 1 May 2022

கோவிந்த..கோவிந்த..

கோவிந்த கோவிந்த ராதா முகுந்தா

முரளீதரா நந்த சந்த்ரா - ஹரே

மதுசூதனா கோகுலேந்திரா

எங்கள் கோலாகலம் கண்ட ப்ருந்தாவனா

நந்த கோபிஜனா போதிசந்த்ரா (கோவிந்த)


காயத்தினை நொந்து கர்மம் கசிந்தபின்

கதியினை தேடத்தகாதே

அதைக் கருத்தினில் கொள்ளப் புகாதே

வெறும் காலத்தினைச் சொல்லி நேரத்தில்

பாதியை கனவென்றுவிட்டு விடாதே (கோவிந்த)


கண்ணால் அவன் உருநாடு - இரு

கண்ணால் அவன் உருநாடு - நல்ல

பண்ணால் அவன் புகழ்நாடு - இரு

கையாலே தாளங்கள் போடு - இரு

காலால் ஆடஒன்றி ஆடு - அந்த

காலன் வந்தால் என்ன நேரில் அவன்

கையில் தாளத்தைக் கொண்டு போய் போடு (கோவிந்த)


நித்யம் அநித்யம் பரத்வம் வசித்வம்

என்றென்றும் புரியாது போபோ

நேரம் எனக்கேது இப்போ

எங்கள் நீலநிறக் கண்ணன் நாமத்தைப்

பாடிடும் ஆனந்தத்திற்கீடில்லை இப்போ

நேரந்தரும் என்று சொல்லு இந்த

நெஞ்சில் அவன் உருகொள்ளு இன்னும்

கூட ஒரு தரம் சொல்லு பலகோடி பழவினை தள்ளு

கோடி கொடுத்தாலும்

பொன்பல கோடி கொடுத்தாலும் பாடும்

பிறவிகள் கூடக் கிடைக்குமோ சொல்லு (கோவிந்த)


பாடக் கிடைத்த நா ஒன்று தாளம்

போடக் கிடைத்த கை இரண்டு

இன்னும் கூடும் கிரணங்கள் மூன்று

வேதம் கோடி எனப்படும் நான்கு வேதம் நான்கு

இந்த குற்றமற்ற சுகம் மற்றவர்க்குச்

சொன்னால் கொள்ளை தான் போகாதே

ஐந்து புலன் ஐந்து (கோவிந்த)


கையில் கிடைத்திட்ட கன்னல்கனிச்

சாற்றை மெய்யே சுடைக்கப்படாதே

அதை கருத்தினில் கொள்ளப் புகாதே

வெறும் காலங்கள் கோளங்கள் அவை

இவை என்று சொல்லி

காலனின் வசப்படாதே - கொடும்

காலனின் வசப்படாதே (கோவிந்த)


பச்சை நிறம் பட்டமேனி தரங்கண்டு

பாடி கிடைந்திட்ட போதே

நம்மை பழவினை ஒன்றும் செய்யாதே

இங்கு பண்ணின புண்ணியம் திண்ணம்

பலித்திட பாடிட வரும் தப்பாதே (கோவிந்த)


காணக்கிடைக்காத தங்கம் - கண்ணன்

காணக் கிடைக்காத தங்கம் - இங்கு

கண்டு களிப்பது சத்தங்கம்

இங்கு வேண்டிய அருள் பொங்கும்

நிகரில்லை என்றெங்கும் தங்கும்

கோணக் கோணச் சொல்லி கோவிந்தா

என்றாலும் கூட அருள் தானே பொங்கும் (கோவிந்த)


பாடும் சுகம் ஒன்று போலே - இந்த

பாரில் இல்லை ஆதலாலே

நாடறியச் சொல்லு மேலே

நாமணக்க பாடும் போலே

கூட கலந்திட்ட ஹாசம் பறந்திடும்

கோலாகலத்துக் கப்பாலே (கோவிந்த)

Friday 3 September 2021

முத்துக்குட் பட்டுச்

 முத்துக்குட் பட்டுச் செவ்வுற 

  கட்டுக்குள் பித்துப் புந்திட 

        திக்கெட்டுந் தத்தித் தாவிய ….        மனதோடு 


மெத்தத்துக் கத்திற் தப்பிட 

  வுஞ்சித்தத் திற்பத் தித்தரு

        மெச்சிச்சொக் கத்தின் திருவடி …. அடிபேண 


இச்சத்தின் உச்சித் தூய்பட 

  பிச்சத்தில் குப்பித் தெளியவு 

        மொத்தத்தில் நத்திச் சரண்புக .. லெனவோடி 


பற்றற்றுப் புத்தித் தெளிந்திட 

  முட்டத்துக் கொப்புத் துயர்விட 

        சித்சத்துக் குத்திச் சுவைபட …..  இனிதாக 


குட்டத்தித் துத்திச் சீர்பட 

  மக்கட்பற் றுத்திச் செகமினி 

        சுத்தத்துட் பட்டுக் கினிசுக ….  மருள்வேண்டி 


திக்கெட்டு நத்தித் தொழுதிடு 

  முச்சத்திக் கொப்புக் குருபர 

        னுன்நாமம் செப்பித் தொழுதி …. வருவேனே 


எத்திக்கும் நத்திச் சுகபட 

  தித்திக்கச் சத்தித் தலமுடை 

        சொக்கத்தெய் வத்தி னருள்தரு ….  பெருமானே 


சித்திக்க பத்தித் தொற்றிட 

  பத்திக்கு வித்துக் கிட்டிட 

        முத்தொக்கச் சித்திப் பெற்றிட ….. அருள்வாயே !


அருள் புரிவாய் எந்தன் குருவே !! ஆண்டருள்வாயே,

 அருள் புரிவாய் எந்தன் குருவே !! 

ஆண்டருள்வாயே,

ஆதரிப்பாய் எனையே


அருள் புரிவாய்...


நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமும்,

உந்தன் பதமலரதனை

எந்தன் மனம் நாடிடுதே


அருள் புரிவாய் ...


செகம் முழுதும் போற்றும் ஜகத்குரு சங்கரனே

சேய் எனைக் காத்தருள தாமதமும் வேண்டாமே

எண்ணிலும் எழுத்திலும் நிறைபவனும் நீயே

எம்குல தெய்வமாய் ஏழையெனைக் காத்து ...


அருள் புரிவாய் எந்தன் குருவே ...


கருணை உளம் கொண்ட கற்பகத் தரு நீயே

காமகோடீ வரமாய் காப்பவனும் நீயே

கணப் பொழுதும் எனைத் தவியாமல் காத்திடும் 

கண்கண்ட தெய்வமே காமாக்ஷீ திருவுருவே


அருள் புரிவாய் எந்தன் குருவே ...


சங்கரம் போற்றி.

Saturday 14 August 2021

குருகானம்..

 


ராகம்: காம்போதி

தாளம்: ஆதி


பல்லவி:


வழிகாட்டும் குலதெய்வம் நீயல்லவோ – காஞ்சி 

தலம்மேவும் ஸ்ரீ சந்த்ர சேகரா – புவிதனில்

(வழி….) 


அநுபல்லவி:


எழில்கொஞ்சும் சிவகாஞ்சி குருபீட சங்கரனே 

என்னாளும் மறவேனே எனையாளும் ஈசனே 

(வழி…) 


சரணம்:


அன்பாலே அடியார்க்கும் அம்மையப்ப குருவாகி 

அருகாக அறஞ்சொல்லி ஆதாரப் பொருளாகி 

மறைதந்த தருமங்கள் நியாயங்கள் திறந்தந்து 

தயவுடனே தரணியரின் நலங்காக்க ஆட்கொண்டு 

(வழி…) 


Thursday 27 May 2021

காஞ்சீ புரத்துக்கு வாருங்கள்

 காஞ்சீ புரத்துக்கு வாருங்கள்

குரு கருணா மூர்த்தியைப் பாருங்கள்

காஞ்சீ புரத்துக்கு வாருங்கள்

குரு கருணா மூர்த்தியைப் பாருங்கள்


உலகோர் யார்க்கும் உறவாய் நாளும்

உட்கார்ந்திருப்பதைக் காணுங்கள்

உலகோர் யார்க்கும் உறவாய் நாளும்

உட்கார்ந்திருப்பதைக் காணுங்கள்


காஞ்சீ புரத்துக்கு வாருங்கள்

குரு கருணா மூர்த்தியைப் பாருங்கள்


கந்தனின் பேரில் பிறந்தாலும்

அவர் காமாக்ஷீ அருள் வரமாகும்

கந்தனின் பேரில் பிறந்தாலும்

அவர் காமாக்ஷீ அருள் வரமாகும்


கலியுக தெய்வம் அவரே என்பதை

கருத்தினில் கொண்டால் ஆனந்தம்

கலியுக தெய்வம் அவரே என்பதை

கருத்தினில் கொண்டால் ஆனந்தம்


காஞ்சீ புரத்துக்கு வாருங்கள்

குரு கருணா மூர்த்தியைப் பாருங்கள்


சந்ததி வளம்பெற துதி பாடி அவர்

சன்னதி வருவார் அருள்தேடி

சந்ததி வளம்பெற துதி பாடி அவர்

சன்னதி வருவார் அருள்தேடி


குரு சங்கர குரு சங்கர ஜய ஜய

குரு சங்கர குரு சங்கர

சசி சேகர சசி சேகர  குரு குரு

சசி சேகரா


சந்ததி வளம்பெற துதி பாடி அவர்

சன்னதி வருவார் அருள்தேடி

சந்ததி வளம்பெற துதி பாடி அவர்

சன்னதி வருவார் அருள்தேடி


மங்களச் செவ்வருள் வாகை கூட்டும்

பக்தரும் உணர்வார் நிறைவோடு


காஞ்சீ புரத்துக்கு வாருங்கள்

குரு கருணா மூர்த்தியைப் பாருங்கள்


உச்சிக்காலத்தில் சிருங்காரம் அவன்

அவன் ஒவ்வொரு அழகுக்கும் அலங்காரம்

உச்சிக்காலத்தில் சிருங்காரம் அவன்

அவன் ஒவ்வொரு அழகுக்கும் அலங்காரம்


ஸ்ரீஜகத் குருவைப் பார்க்கும் போதே

பக்தரின் மனதுள் ரீங்காரம்

ஸ்ரீஜகத் குருவைப் பார்க்கும் போதே

பக்தரின் மனதுள் ரீங்காரம்


குரு சங்கர குரு சங்கர ஜய ஜய

குரு சங்கர குரு சங்கர

சசி சேகர சசி சேகர  குரு குரு

சசி சேகரா


காஞ்சீ புரத்துக்கு வாருங்கள்

குரு கருணா மூர்த்தியைப் பாருங்கள்


மாலை நேரத்தில் ஸ்ரீதேவி

போல் மங்களம் நிறைப்பார் அகம் மேவி

மாலை நேரத்தில் ஸ்ரீதேவி

போல் மங்களம் நிறைப்பார் அகம் மேவி


சேய்தனை காக்க தாயவள் கனிவுடன்

நித்தமும் காப்பார் புவி மேவி

சேய்தனை காக்க தாயவள் கனிவுடன்

நித்தமும் காப்பார் புவி மேவி


குரு சங்கர குரு சங்கர ஜய ஜய

குரு சங்கர குரு சங்கர

சசி சேகர சசி சேகர  குரு குரு

சசி சேகரா


சூத்திரதாரி சங்கரனுக்கு

ராத்திரி பூஜை ஜகஜோதி

சாத்திரத் தூமணி தாளடி நிழலில்

பக்தியில் சேர்வதும் உயர் நீதி


காஞ்சீ புரத்துக்கு வாருங்கள்

குரு கருணா மூர்த்தியைப் பாருங்கள்

உலகோர் யார்க்கும் உறவாய் நாளும்

உட்கார்ந்திருப்பதைக் காணுங்கள்


காஞ்சீ புரத்துக்கு வாருங்கள்

குரு கருணா மூர்த்தியைப் பாருங்கள்


குரு சங்கர குரு சங்கர ஜய ஜய

குரு சங்கர குரு சங்கர

சசி சேகர சசி சேகர  குரு குரு

சசி சேகரா


Thursday 8 April 2021

காஞ்சி சங்கரா…

 காஞ்சி சங்கரா…. குரு காஞ்சி சங்கரா… 

காஞ்சி காமகோடி பீட சந்த்ர சேகரா 

(காஞ்சி…) 


காஞ்சியிலே கோயில் கொண்ட ஜெகத்குருநாதா 

காமகோடி பீடேஸ்வர சந்த்ர சேகரா 


அயன் எழுத்தை மாற்றவல்ல அம்புஜ நேத்ரா 

கயல் விழியாள் காமாக்ஷீ ரூபி சங்கரா 

(காஞ்சி…) 


சேய்களிங்கு செந்தணலில் துடித்து நிற்கிறோம் 

தாயுந்தன் தயவுதேடி தவித்து நிற்கிறோம்


பாவிகளைப் பார்த்த பின்பும் பரிவு மில்லையோ? 

தாவிவந்து காத்திடவே தயவு மில்லையோ? 

(காஞ்சி…) 


ஓடிவந்தே காட்சிதந்து ஆட்சி செய்பவா 

துணிவு தந்து துயரந்தீர்க்கும் தூய மன்னவா 


வேதகீத நாதமுடன் பாதந் தொழுகின்றோம் 

வாதரோக தோஷமெல்லாம் போக்கியருள வா 

(காஞ்சி…)