Tuesday 24 November 2020

ஜோதிஜோதி

 ஜோதி ஜோதி ஜோதியனின் ஜோதி பாருங்கள் - உங்கள்

சோதனைகள் தீருமென்று நம்பிப் பாருங்கள் - குருவின்

போதனைகள் கூறும்வண்ணம் வாழ்ந்து பாருங்கள்


(ஜோதி...)


ஆலடியில் அமர்ந்தவனின் அழகைப் பாருங்கள்

ஆலடியில் அமர்ந்தவனின் அழகைப் பாருங்கள்- புவியை

ஆண்டருளும் அழகனவன் ஜோதி பாருங்கள் - சங்கரன்

ஆதிகுரு ரூபம் அதை உணர்ந்து பாருங்கள்


(ஜோதி...)


பூலோக மாந்தர்கள் நம் வாழ்வு விளங்கவே

பூலோக மாந்தர்கள் நம் வாழ்வு விளங்கவே - வேதம்

பெற்றுத் தந்த பரம்பொருளைத் தொழுது பாடுவோம்- காஞ்சி

சங்கரனின் ஜோதி ரூபம் கண்டு வேண்டுவோம்


(ஜோதி...)


வேத வேந்தன் ஞான ஸ்கந்தன் நாமம் போற்றியே

வேத வேந்தன் ஞான ஸ்கந்தன் நாமம் போற்றியே - நான்கு

வேதவழி தர்மநெறி வாழப் பழகுவோம் - வாழ்வில்

வளம்பெறவே தர்மநெறி உணர்ந்து வாழுவோம்


(ஜோதி...)


நடை நடையாய் நடந்தருளும் நளினம் போற்றியே

நடை நடையாய் நடந்தருளும் நளினம் போற்றியே - நாளும்

நடைராசன் சங்கரனின் கழலை நாடுவோம் - குருவை

நெஞ்சகத்தில் போற்றி நாளும் சிறந்து வாழுவோம்


(ஜோதி...)


சின்னஞ்சிறு கிளியே

 சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா செல்வக் களஞ்சியமே

என்னைக் கலி தீர்த்தே உலகில் ஏற்றம் புரிய வந்தாய்


பிள்ளைக் கனியமுதே கண்ணம்மா பேசும் பொற்சித்திரமே

அள்ளி அணைத்திடவே என் முன்னே ஆடி வரும் தேனே


ஓடி வருகையிலே கண்ணம்மா உள்ளம் குளிருதடி

ஆடித் திரிதல் கண்டால் உன்னைப்போய் ஆவி தழுவுதடி


உச்சிதனை முகர்ந்தால் கருவம் ஓங்கி வளருதடி

மெச்சியுனை ஊரார் புகழ்ந்தால் மேனி சிலிர்க்குதடி


கன்னத்தில் முத்தமிட்டால் உள்ளந்தான் கள்வெறி கொள்ளுதடி

உன்னைத் தழுவிடலோ கண்ணம்மா உன்மத்தமாகுதடி


சற்றுன் முகம் சிவந்தால் மனது சஞ்சலமாகுதடி

நெற்றி சுருங்கக் கண்டால் எனக்கு நெஞ்சம் பதைக்குதடி

உன் கண்ணில் நீர் வடிந்தால் என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி

என் கண்ணிற் பாவையன்றோ கண்ணம்மா என்னுயிர் நின்னதன்றோ


சொல்லு மழலையிலே கண்ணம்மா துன்பங்கள் தீர்த்திடுவாய்

முல்லைச் சிரிப்பாலே எனது மூர்க்கம் தவிர்த்திடுவாய்


இன்பக் கதைகளெல்லம் உன்னைப்போல் ஏடுகள் சொல்வதுண்டோ

அன்பு தருவதிலே உன்னை நேர் ஆகுமோர் தெய்வம் உண்டோ


மார்பில் அணிவதற்கே உன்னைப்போல் வைர மணிகளுண்டோ

சீர்பெற்று வாழ்வதற்கே உன்னைப்போல் செல்வம் பிரிதுமுண்டோ


Monday 9 November 2020

மகாபெரியவாAnthem

 ஜனகனமன மெட்டு

ஜய ஜய சங்கர காஞ்சிய மா'தவ

சசிசே கரகுரு நாதா!

செந்தாள் பணிந்து வேண்டுவ ரெவர்க்கும்

சிறப்புற வாழ்ந்திட வரம் தா!

விந்திய ஹிமாசல கங்காதாரா!

கருணா சாந்தஸ்வ ரூபா!

குருபர காஞ்சிய நேயா!

குவலயம் காத்தருள் தேவா!

தவ முனி வரர் பணி தீரா!

ஹர ஹர சந்திர சேகர குருவே

பதம் பணிந்தோம் எமை கா! வா!

நிதமே... ஜயமே... சிவமே...

சந்திர சேகர வரமே!