Sunday 24 January 2021

ஒன்றானவன்

 ஸ்ரீகுருகானம் 


ஒன்றானவன் உயர்வின் உருவானவன் 

குருவான திருக்காஞ்சி முதலாம் அவன் 


(ஒன்றானவன்….) 


இரண்டான சரிபாதி அருளானவன் 

ஸ்ரீசந்த்ர சேகர சங்கரனாம் அவன் 


(ஒன்றானவன்….) 


தித்திக்கும் இறைநேயப் பொருளானவன் 

சித்திக்கும் எட்டிற்கும் வித்தானவன் 

முத்தான முனிவர்க்கும் மூத்தோன் அவன்– மூல 

சித்தான திருவனிதை அருளாம் அவன் 

ஜகத் குருவாம் அவன் 


(ஒன்றானவன்….) 


ஸ்வரம்ஏழு சுவைஆறுக் கீடானவன் 

ஸ்வயமாக திருப்பீடத் தெழிலானவன் 

ஸ்ருதிகூட்டும் சீர்பதமும் மொழிவான் அவன்– சீலம் 

சீரோடும் சிறப்பேற்க அருள்வான் அவன் 

ஜகத் குருவாம் அவன் 

ஸ்ரீசந்திரசேகரனாம் அவன்




அமுதம் அமுதம்..

 #ஸ்ரீகுருகானம்.


அமுதம் அமுதம் அமுதம் தேனமுதம் அமுதம் அமுதம்


நினைவும் அமுதம் அணைவும் அமுதம்

நிதமும் அமுதம் நிகழ்வும் அமுதம்

பதமும் அமுதம் பரமும் அமுதம்

பரமா சார்யன் பதநிழல் அமுதம்


அமுதம்... அமுதம்...

அமுதம்... அமுதம்...


தீரா பிணியும் அகலும் அமுதம்

பாரோர் துயரும் விலகும் அமுதம்

சாடா நிலையும் அமையும் அமுதம்

பரமா சார்யன் பதநிழல் அமுதம்


அமுதம்... அமுதம்...

அமுதம்... அமுதம்...


காஞ்சீ கனலின் கருணை அமுதம்

காக்கும் கரமும் பொழியும் அமுதம்

கீழோர் மேலோர் சாடா அமுதம்

பரமா சார்யன் பதநிழல் அமுதம்


அமுதம்... அமுதம்...

அமுதம்... அமுதம்...


மனிதம் உணரும் மகிமை அமுதம்

இனிதும் இனிக்கும் இனிமை அமுதம்

வனிதை அருளில் விளங்கும் அமுதம்

பரமா சார்யன் பதநிழல் அமுதம்


அமுதம்... அமுதம்...

அமுதம்... அமுதம்...


கூடா நடப்பும் குறைக்கும் அமுதம்

சாடா நிலையும் நிறைக்கும் அமுதம்

வாரா வினைபயன் தருமம் நிலைக்கும்

பரமா சார்யன் பதநிழல் அமுதம்


அமுதம்... அமுதம்...

அமுதம்... அமுதம்...


அதரம் மதுரம்

 அதரம் மதுரம் வதனம் மதுரம்

னயனம் மதுரம் ஹஸிதம் மதுரம் |
ஹ்றுதயம் மதுரம் கமனம் மதுரம்
மதுராதிபதேரகிலம் மதுரம் || 1 ||

வசனம் மதுரம் சரிதம் மதுரம்
வஸனம் மதுரம் வலிதம் மதுரம் |
சலிதம் மதுரம் ப்ரமிதம் மதுரம்
மதுராதிபதேரகிலம் மதுரம் || 2 ||

வேணு-ர்மதுரோ ரேணு-ர்மதுரஃ
பாணி-ர்மதுரஃ பாதௌ மதுரௌ |
ன்றுத்யம் மதுரம் ஸக்யம் மதுரம்
மதுராதிபதேரகிலம் மதுரம் || 3 ||

கீதம் மதுரம் பீதம் மதுரம்
புக்தம் மதுரம் ஸுப்தம் மதுரம் |
ரூபம் மதுரம் திலகம் மதுரம்
மதுராதிபதேரகிலம் மதுரம் || 4 ||

கரணம் மதுரம் தரணம் மதுரம்
ஹரணம் மதுரம் ஸ்மரணம் மதுரம் |
வமிதம் மதுரம் ஶமிதம் மதுரம்
மதுராதிபதேரகிலம் மதுரம் || 5 ||

குஞ்ஜா மதுரா மாலா மதுரா
யமுனா மதுரா வீசீ மதுரா |
ஸலிலம் மதுரம் கமலம் மதுரம்
மதுராதிபதேரகிலம் மதுரம் || 6 ||

கோபீ மதுரா லீலா மதுரா
யுக்தம் மதுரம் முக்தம் மதுரம் |
த்றுஷ்டம் மதுரம் ஶிஷ்டம் மதுரம்
மதுராதிபதேரகிலம் மதுரம் || 7 ||

கோபா மதுரா காவோ மதுரா
யஷ்டி ர்மதுரா ஸ்றுஷ்டி ர்மதுரா |
தலிதம் மதுரம் பலிதம் மதுரம்
மதுராதிபதேரகிலம் மதுரம் || 8 |

Thursday 14 January 2021

பொன்னூஞ்சல் ஆடி இருந்தார் -

பொன்னூஞ்சல் ஆடி இருந்தார் - காஞ்சி குரு நாதன்

பொன்னூஞ்சல் ஆடி இருந்தார்


நங்கை ஒரு பாதியும் மேவும்

கங்கை பிறை சூடிய நாதன்

மங்கை உறைத் திருத்தலமேகி

அங்கை யருள் ஜெகத்குருவாக


(பொன்னூஞ்சல்...)


பொன்னார் திரு மேனியனாக

முன்நாள் வினை கலைவதற்காக

கண்ணால் அருள் புரிவதற்கென்றே

செந்நா வுரை தந்திடவேண்டி


(பொன்னூஞ்சல்...)


நான்மறையும் நன்கு விளங்க

காண்பரையும் காத்து துலங்க

வான்மதியாள் குளிரிதம் தந்தே

தேன்சுவையாய் சந்ததம் அருளி


(பொன்னூஞ்சல்...)


பக்தியுடன் அங்கம் துலக்கி

சித்திபெற சங்கம் புகுந்து

சக்திசிவம் அகமுற நினையும்

பக்தர்களைக் காத்தருள் குருவாய்


(பொன்னூஞ்சல்...)

Wednesday 13 January 2021

 வேலவா வேலவா வேல் முருகா வா வா


வேலவா வேலவா வேல் முருகா வா வா

வேல் முருகா வா வா  – வடி

வேல் முருகா வா வா  

வேலவா ஷண்முகா முருகா முருகா– வடி

வேலவா ஷண்முக முருகா முருகா

 

வள்ளி மணவாளா குஞ்சரி மணாளா

வள்ளி மணவாளா குஞ்சரி மணாளா

குஞ்சரி மணாளா - தேவ

குஞ்சரி மணாளா

வண்ண மயில் வாகனா முருகா முருகா  

- வேலவா வேலவா வேல் முருகா வா வா

 

சூராதி சூரா சுப்ரமணிய தேவா – சிவ

சுப்ரமணிய தேவா

ஷண்முக சரவணா முருகா முருகா

ஷண்முக ஷண்முக ஷண்முக ஷண்முக

ஷண்முக ஷண்முக ஷண்முக ஷண்முக

ஷண்முக சரவணா முருகா முருகா

 

பச்சை மலை பவழ மலை பாசி படர்ந்த மலை

பங்குனி தேர் ஓடும் மலை பழனி மலை யோ....

வேலனுக்கு அரோஹரா முருகனுக்கு அரோஹரா

கந்தனுக்கு அரோஹரா கடம்பனுக்கு அரோஹரா

குமரனுக்கு அரோஹரா பாலனுக்கு அரோஹரா

ஷண்முகனுக்கு சரவணா முருகனுக்கு அரோஹரா

அரோஹரா அரோஹரா அரோஹரா அரோஹரா

அரோஹரா அரோஹரா சத்தம் கேட்குதே

அடியார்கள் கூட்டம் எல்லாம் அவனை பாடுதே

 

வீதிதோறும் தோரணமாம்விதவிதமாய் காவடியாம்

பால் காவடி பன்னீர் காவடி புஷ்ப காவடியாம்

சந்தனக்காவடி சர்ப்பக்காவடி மயிலுக் காவடியாம்

 

வேல் வேல் முருகா வெற்றி வேல் முருகா

வேல் வேல் முருகா முருகா முருகா    

வேல் வேல் முருகா வடி வேல் முருகா

அம்ப பரமேஸ்வரி

 அம்ப பரமேஸ்வரி அகிலாண்டேஸ்வரி

ஆதி பராசக்தி பாலயமாம் (x2)

திரிபுரசுந்தரி ராஜராஜேஷ்வரி
திருபுவனேஸ்வரி பாலயமாம்
அம்ப பரமேஸ்வரி அகிலாண்டேஸ்வரி
ஆதி பராசக்தி பாலயமாம்

காஞ்சி காமாக்ஷி மதுரை மீனாக்ஷி
காசி விசாலாக்ஷி பாலயமாம்
அம்ப பரமேஸ்வரி அகிலாண்டேஸ்வரி
ஆதி பராசக்தி பாலயமாம் 

ஜெய ஆதி பராசக்தி பாலயமாம்

Tuesday 12 January 2021

ஆண்டாள் பாட்டு


ராகம்.ஹம்ஸத்வனி


தாளம்: ஆதி

பல்லவி

வரம் தருவாய் ஸ்ரீவரமங்கையே என் வாழ்வெல்லாம் உன்னையே வாழ்த்தி வணங்கிடவே (வரம்)

அனுபல்லவி

றந்தும் நான் தீவினை கறைபடாதிருக்கவும்

(உன்) மலர்பதம் தொழுதேமகிழ்ச்சியில் திளைக்கவும் (வரம்)

சரணம்

திருமலையில் நீ அலர்மேல் மங்கையாக

திருத்தங்காலில் நீ செங்கமலத்தாயாராக (இரண்டு வரிகளும் இரண்டு முறை)

னதிஒருவில்லிபுத்தூரில் நீ ஆண்டாளக

திருவரங்கத்தில் நீ ரெங்க நாயகியாக (வரம்)

மாடு மேய்க்கும் கண்ணே நீ

 

யசோதை:
மாடு மேய்க்கும் கண்ணே நீ
போக வேண்டாம் சொன்னேன்

அனுபல்லவி:

கண்ணன்:
போக வேணும் தாயே
தடை சொல்லாதே நீயே

சரணம்:

காய்ச்சின பாலு தரேன்கல்கண்டுச் சீனி தரேன்
கை நிறைய வெண்ணைய் தரேன்;வெய்யிலிலே போக வேண்டாம்
(மாடு மேய்க்கும் கண்ணே - நீ போகவேண்டாம் சொன்னேன்) 

காய்ச்சின பாலும் வேண்டாம்;கல்கண்டுச் சீனி வேண்டாம்
உல்லாசமாய் மாடு மேய்த்துஒரு நொடியில் திரும்பிடுவேன்
(போக வேணும் தாயே - தடை சொல்லாதே நீயே) 
----------------------------------------------------------------------------

யமுனா நதிக் கரையில் எப்பொழுதும் கள்வர் பயம்
கள்வர் வந்து உனை அடித்தால் கலங்கிடுவாய் கண்மணியே 
(மாடு மேய்க்கும் கண்ணே - நீ போகவேண்டாம் சொன்னேன்) 

கள்ளனுக்கோர் கள்ளன் உண்டோ?கண்டதுண்டோ சொல்லும் அம்மா?
கள்வர் வந்து எனை அடித்தால் கண்ட துண்டம் செய்திடுவேன் 
(போக வேணும் தாயே - தடை சொல்லாதே நீயே) 
----------------------------------------------------------------------------

கோவர்த்தன கிரியில் கோரமான மிருகங்கள் உண்டு
கரடி புலியைக் கண்டால் கலங்கிடுவாய் கண்மணியே 
(மாடு மேய்க்கும் கண்ணே - நீ போகவேண்டாம் சொன்னேன்) 

காட்டு மிருகமெல்லாம் என்னைக் கண்டால் ஓடி வரும்
கூட்டங் கூட்டமாக வந்தால் வேட்டை ஆடி ஜெயித்திடுவேன்
(போக வேணும் தாயே - தடை சொல்லாதே நீயே) 
----------------------------------------------------------------------------

பாசமுள்ள நந்தகோபர் பாலன் எங்கே என்று கேட்டால்
என்ன பதில் சொல்வேனடா என்னுடைய கண்மணியே 
(மாடு மேய்க்கும் கண்ணே - நீ போகவேண்டாம் சொன்னேன்) 

பாலருடன் வீதியிலே பந்தாடுறான் என்று சொல்லேன்
தேடி என்னை வருகையிலே ஓடி வந்து நின்றிடுவேன் 
(போக வேணும் தாயே - தடை சொல்லாதே நீயே)

Sunday 10 January 2021

முத்தைத்தரு ராகம்

 முத்தைத்தரு ராகம்..

சித்தித்தருட் பித்தப் பரமனும் 

        பத்தித்தரும் முத்தித் திருமறை 

                புந்தித்தரு சந்தத் திருவருட் ......         குருநாதா 


நந்திக்கொடி கொண்டப் பெருமிறை 

        தந்தத்திரு வேதப் பெருமறை 

                உந்தத்தகு பத்தித் தொழுதிட....         யுனைநாடி 


கச்சித்தல புந்தித் திருவருள் 

        மெச்சித்தரு சந்தத் தொலியொடு 

                சத்தித்தரு மெத்தக் குருபர ....          எனவோதி 


குட்டத்திரு பத்தித் தெளிவதும் 

        முட்டித்தரு மெத்தத் திருவொளி 

                கச்சித்தல முத்தித் திருவடி ..        யுனதாலே 


பட்டப்பெரு துட்டப் பிணியது 

        விட்டத்தெழு முட்டக் கதியது 

                விட்டுத்திட மெட்டிப் பிடியதும் .....எனதாக 


திக்குத்திசை யெக்கிப் படர்உரு 

        முக்கட்சடை சித்தப் புகலென 

                முத்தித்துவக் குற்றுத் தவநெறி ...        யுடையீசா 


முட்டுப்பட மெட்டுத் தீயதுந் 

        தட்டுபடு மட்டப் பெருவெளி 

                கட்டுத்தறி யாதுங் களைந்திட  ..... வுனைநாடி 


தித்தித்தகு துத்திச் சுவைபட 

        சத்தித்தரு சித்தத் திருவென 

                முத்தித்தரு பத்திச் சங்கர ...... பெருமானே!