Sunday, 24 January 2021

ஒன்றானவன்

 ஸ்ரீகுருகானம் 


ஒன்றானவன் உயர்வின் உருவானவன் 

குருவான திருக்காஞ்சி முதலாம் அவன் 


(ஒன்றானவன்….) 


இரண்டான சரிபாதி அருளானவன் 

ஸ்ரீசந்த்ர சேகர சங்கரனாம் அவன் 


(ஒன்றானவன்….) 


தித்திக்கும் இறைநேயப் பொருளானவன் 

சித்திக்கும் எட்டிற்கும் வித்தானவன் 

முத்தான முனிவர்க்கும் மூத்தோன் அவன்– மூல 

சித்தான திருவனிதை அருளாம் அவன் 

ஜகத் குருவாம் அவன் 


(ஒன்றானவன்….) 


ஸ்வரம்ஏழு சுவைஆறுக் கீடானவன் 

ஸ்வயமாக திருப்பீடத் தெழிலானவன் 

ஸ்ருதிகூட்டும் சீர்பதமும் மொழிவான் அவன்– சீலம் 

சீரோடும் சிறப்பேற்க அருள்வான் அவன் 

ஜகத் குருவாம் அவன் 

ஸ்ரீசந்திரசேகரனாம் அவன்




No comments:

Post a Comment