முத்தைத்தரு ராகம்..
சித்தித்தருட் பித்தப் பரமனும்
பத்தித்தரும் முத்தித் திருமறை
புந்தித்தரு சந்தத் திருவருட் ...... குருநாதா
நந்திக்கொடி கொண்டப் பெருமிறை
தந்தத்திரு வேதப் பெருமறை
உந்தத்தகு பத்தித் தொழுதிட.... யுனைநாடி
கச்சித்தல புந்தித் திருவருள்
மெச்சித்தரு சந்தத் தொலியொடு
சத்தித்தரு மெத்தக் குருபர .... எனவோதி
குட்டத்திரு பத்தித் தெளிவதும்
முட்டித்தரு மெத்தத் திருவொளி
கச்சித்தல முத்தித் திருவடி .. யுனதாலே
பட்டப்பெரு துட்டப் பிணியது
விட்டத்தெழு முட்டக் கதியது
விட்டுத்திட மெட்டிப் பிடியதும் .....எனதாக
திக்குத்திசை யெக்கிப் படர்உரு
முக்கட்சடை சித்தப் புகலென
முத்தித்துவக் குற்றுத் தவநெறி ... யுடையீசா
முட்டுப்பட மெட்டுத் தீயதுந்
தட்டுபடு மட்டப் பெருவெளி
கட்டுத்தறி யாதுங் களைந்திட ..... வுனைநாடி
தித்தித்தகு துத்திச் சுவைபட
சத்தித்தரு சித்தத் திருவென
முத்தித்தரு பத்திச் சங்கர ...... பெருமானே!
No comments:
Post a Comment