#ஸ்ரீகுருகானம்.
அமுதம் அமுதம் அமுதம் தேனமுதம் அமுதம் அமுதம்
நினைவும் அமுதம் அணைவும் அமுதம்
நிதமும் அமுதம் நிகழ்வும் அமுதம்
பதமும் அமுதம் பரமும் அமுதம்
பரமா சார்யன் பதநிழல் அமுதம்
அமுதம்... அமுதம்...
அமுதம்... அமுதம்...
தீரா பிணியும் அகலும் அமுதம்
பாரோர் துயரும் விலகும் அமுதம்
சாடா நிலையும் அமையும் அமுதம்
பரமா சார்யன் பதநிழல் அமுதம்
அமுதம்... அமுதம்...
அமுதம்... அமுதம்...
காஞ்சீ கனலின் கருணை அமுதம்
காக்கும் கரமும் பொழியும் அமுதம்
கீழோர் மேலோர் சாடா அமுதம்
பரமா சார்யன் பதநிழல் அமுதம்
அமுதம்... அமுதம்...
அமுதம்... அமுதம்...
மனிதம் உணரும் மகிமை அமுதம்
இனிதும் இனிக்கும் இனிமை அமுதம்
வனிதை அருளில் விளங்கும் அமுதம்
பரமா சார்யன் பதநிழல் அமுதம்
அமுதம்... அமுதம்...
அமுதம்... அமுதம்...
கூடா நடப்பும் குறைக்கும் அமுதம்
சாடா நிலையும் நிறைக்கும் அமுதம்
வாரா வினைபயன் தருமம் நிலைக்கும்
பரமா சார்யன் பதநிழல் அமுதம்
அமுதம்... அமுதம்...
அமுதம்... அமுதம்...
No comments:
Post a Comment