Friday 3 September 2021

முத்துக்குட் பட்டுச்

 முத்துக்குட் பட்டுச் செவ்வுற 

  கட்டுக்குள் பித்துப் புந்திட 

        திக்கெட்டுந் தத்தித் தாவிய ….        மனதோடு 


மெத்தத்துக் கத்திற் தப்பிட 

  வுஞ்சித்தத் திற்பத் தித்தரு

        மெச்சிச்சொக் கத்தின் திருவடி …. அடிபேண 


இச்சத்தின் உச்சித் தூய்பட 

  பிச்சத்தில் குப்பித் தெளியவு 

        மொத்தத்தில் நத்திச் சரண்புக .. லெனவோடி 


பற்றற்றுப் புத்தித் தெளிந்திட 

  முட்டத்துக் கொப்புத் துயர்விட 

        சித்சத்துக் குத்திச் சுவைபட …..  இனிதாக 


குட்டத்தித் துத்திச் சீர்பட 

  மக்கட்பற் றுத்திச் செகமினி 

        சுத்தத்துட் பட்டுக் கினிசுக ….  மருள்வேண்டி 


திக்கெட்டு நத்தித் தொழுதிடு 

  முச்சத்திக் கொப்புக் குருபர 

        னுன்நாமம் செப்பித் தொழுதி …. வருவேனே 


எத்திக்கும் நத்திச் சுகபட 

  தித்திக்கச் சத்தித் தலமுடை 

        சொக்கத்தெய் வத்தி னருள்தரு ….  பெருமானே 


சித்திக்க பத்தித் தொற்றிட 

  பத்திக்கு வித்துக் கிட்டிட 

        முத்தொக்கச் சித்திப் பெற்றிட ….. அருள்வாயே !


அருள் புரிவாய் எந்தன் குருவே !! ஆண்டருள்வாயே,

 அருள் புரிவாய் எந்தன் குருவே !! 

ஆண்டருள்வாயே,

ஆதரிப்பாய் எனையே


அருள் புரிவாய்...


நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமும்,

உந்தன் பதமலரதனை

எந்தன் மனம் நாடிடுதே


அருள் புரிவாய் ...


செகம் முழுதும் போற்றும் ஜகத்குரு சங்கரனே

சேய் எனைக் காத்தருள தாமதமும் வேண்டாமே

எண்ணிலும் எழுத்திலும் நிறைபவனும் நீயே

எம்குல தெய்வமாய் ஏழையெனைக் காத்து ...


அருள் புரிவாய் எந்தன் குருவே ...


கருணை உளம் கொண்ட கற்பகத் தரு நீயே

காமகோடீ வரமாய் காப்பவனும் நீயே

கணப் பொழுதும் எனைத் தவியாமல் காத்திடும் 

கண்கண்ட தெய்வமே காமாக்ஷீ திருவுருவே


அருள் புரிவாய் எந்தன் குருவே ...


சங்கரம் போற்றி.