பொன்னூஞ்சல் ஆடி இருந்தார் - காஞ்சி குரு நாதன்
பொன்னூஞ்சல் ஆடி இருந்தார்
நங்கை ஒரு பாதியும் மேவும்
கங்கை பிறை சூடிய நாதன்
மங்கை உறைத் திருத்தலமேகி
அங்கை யருள் ஜெகத்குருவாக
(பொன்னூஞ்சல்...)
பொன்னார் திரு மேனியனாக
முன்நாள் வினை கலைவதற்காக
கண்ணால் அருள் புரிவதற்கென்றே
செந்நா வுரை தந்திடவேண்டி
(பொன்னூஞ்சல்...)
நான்மறையும் நன்கு விளங்க
காண்பரையும் காத்து துலங்க
வான்மதியாள் குளிரிதம் தந்தே
தேன்சுவையாய் சந்ததம் அருளி
(பொன்னூஞ்சல்...)
பக்தியுடன் அங்கம் துலக்கி
சித்திபெற சங்கம் புகுந்து
சக்திசிவம் அகமுற நினையும்
பக்தர்களைக் காத்தருள் குருவாய்
(பொன்னூஞ்சல்...)
No comments:
Post a Comment