Tuesday, 24 November 2020

ஜோதிஜோதி

 ஜோதி ஜோதி ஜோதியனின் ஜோதி பாருங்கள் - உங்கள்

சோதனைகள் தீருமென்று நம்பிப் பாருங்கள் - குருவின்

போதனைகள் கூறும்வண்ணம் வாழ்ந்து பாருங்கள்


(ஜோதி...)


ஆலடியில் அமர்ந்தவனின் அழகைப் பாருங்கள்

ஆலடியில் அமர்ந்தவனின் அழகைப் பாருங்கள்- புவியை

ஆண்டருளும் அழகனவன் ஜோதி பாருங்கள் - சங்கரன்

ஆதிகுரு ரூபம் அதை உணர்ந்து பாருங்கள்


(ஜோதி...)


பூலோக மாந்தர்கள் நம் வாழ்வு விளங்கவே

பூலோக மாந்தர்கள் நம் வாழ்வு விளங்கவே - வேதம்

பெற்றுத் தந்த பரம்பொருளைத் தொழுது பாடுவோம்- காஞ்சி

சங்கரனின் ஜோதி ரூபம் கண்டு வேண்டுவோம்


(ஜோதி...)


வேத வேந்தன் ஞான ஸ்கந்தன் நாமம் போற்றியே

வேத வேந்தன் ஞான ஸ்கந்தன் நாமம் போற்றியே - நான்கு

வேதவழி தர்மநெறி வாழப் பழகுவோம் - வாழ்வில்

வளம்பெறவே தர்மநெறி உணர்ந்து வாழுவோம்


(ஜோதி...)


நடை நடையாய் நடந்தருளும் நளினம் போற்றியே

நடை நடையாய் நடந்தருளும் நளினம் போற்றியே - நாளும்

நடைராசன் சங்கரனின் கழலை நாடுவோம் - குருவை

நெஞ்சகத்தில் போற்றி நாளும் சிறந்து வாழுவோம்


(ஜோதி...)


No comments:

Post a Comment