அலைபாயுதே ராகம்...
நிறைவானதே மன்னா என் மனம் மிக நிறைவானதே - உன் ஆனந்த கோமள தரிசனம் கண்டு (நிறைவானதே…)
வினை தொடராது கலை யாகவே வாழ்வில் மேகத் தூறல்தனில் ஆடிடும் கொடியின் ஆனந்த நிறைவு போலவே என் மனம் (நிறைவானதே…)
தெளிந்த மனதில் உந்தன் உருவும் நிறையுதே – என் சித்தம் போக்கில் உந்தன் வாக்கும் ஒளிருதே இனிக்க உன் நாம கானம் காற்றில் வருகுதே நெஞ்சம் குளிர்ந்து உந்தன் நினைவால் உருகுதே ##
இனிக்க மனத்தில் இருத்தி பதித்த மணக்கும் தருமம் அளித்தவா –
உளம் களிக்கும் விதத்தில் எடுத்து எமக்கு உரைத்து மனத்தில் நிறைத்தவா
மாந்தரும் யாவரும் உறவென ஒருகுலம் எனும் பதம் அளித்தவா
பிறவி பெருங்கடலில் வாழ்வு காக்க வா
இடரிடாதபடி வாழ்வு சிறக்க வா
எது சுகமோ எது நிறைவோ அது எமக்கும் உண்டோ
குரு அருள்தனில் கலியில் உலகமும் மகிழ பத நிழல் வரமும் கிடைத்து இனித்திட (நிறைவானதே…)
No comments:
Post a Comment