Sunday 1 May 2022

கோவிந்த..கோவிந்த..

கோவிந்த கோவிந்த ராதா முகுந்தா

முரளீதரா நந்த சந்த்ரா - ஹரே

மதுசூதனா கோகுலேந்திரா

எங்கள் கோலாகலம் கண்ட ப்ருந்தாவனா

நந்த கோபிஜனா போதிசந்த்ரா (கோவிந்த)


காயத்தினை நொந்து கர்மம் கசிந்தபின்

கதியினை தேடத்தகாதே

அதைக் கருத்தினில் கொள்ளப் புகாதே

வெறும் காலத்தினைச் சொல்லி நேரத்தில்

பாதியை கனவென்றுவிட்டு விடாதே (கோவிந்த)


கண்ணால் அவன் உருநாடு - இரு

கண்ணால் அவன் உருநாடு - நல்ல

பண்ணால் அவன் புகழ்நாடு - இரு

கையாலே தாளங்கள் போடு - இரு

காலால் ஆடஒன்றி ஆடு - அந்த

காலன் வந்தால் என்ன நேரில் அவன்

கையில் தாளத்தைக் கொண்டு போய் போடு (கோவிந்த)


நித்யம் அநித்யம் பரத்வம் வசித்வம்

என்றென்றும் புரியாது போபோ

நேரம் எனக்கேது இப்போ

எங்கள் நீலநிறக் கண்ணன் நாமத்தைப்

பாடிடும் ஆனந்தத்திற்கீடில்லை இப்போ

நேரந்தரும் என்று சொல்லு இந்த

நெஞ்சில் அவன் உருகொள்ளு இன்னும்

கூட ஒரு தரம் சொல்லு பலகோடி பழவினை தள்ளு

கோடி கொடுத்தாலும்

பொன்பல கோடி கொடுத்தாலும் பாடும்

பிறவிகள் கூடக் கிடைக்குமோ சொல்லு (கோவிந்த)


பாடக் கிடைத்த நா ஒன்று தாளம்

போடக் கிடைத்த கை இரண்டு

இன்னும் கூடும் கிரணங்கள் மூன்று

வேதம் கோடி எனப்படும் நான்கு வேதம் நான்கு

இந்த குற்றமற்ற சுகம் மற்றவர்க்குச்

சொன்னால் கொள்ளை தான் போகாதே

ஐந்து புலன் ஐந்து (கோவிந்த)


கையில் கிடைத்திட்ட கன்னல்கனிச்

சாற்றை மெய்யே சுடைக்கப்படாதே

அதை கருத்தினில் கொள்ளப் புகாதே

வெறும் காலங்கள் கோளங்கள் அவை

இவை என்று சொல்லி

காலனின் வசப்படாதே - கொடும்

காலனின் வசப்படாதே (கோவிந்த)


பச்சை நிறம் பட்டமேனி தரங்கண்டு

பாடி கிடைந்திட்ட போதே

நம்மை பழவினை ஒன்றும் செய்யாதே

இங்கு பண்ணின புண்ணியம் திண்ணம்

பலித்திட பாடிட வரும் தப்பாதே (கோவிந்த)


காணக்கிடைக்காத தங்கம் - கண்ணன்

காணக் கிடைக்காத தங்கம் - இங்கு

கண்டு களிப்பது சத்தங்கம்

இங்கு வேண்டிய அருள் பொங்கும்

நிகரில்லை என்றெங்கும் தங்கும்

கோணக் கோணச் சொல்லி கோவிந்தா

என்றாலும் கூட அருள் தானே பொங்கும் (கோவிந்த)


பாடும் சுகம் ஒன்று போலே - இந்த

பாரில் இல்லை ஆதலாலே

நாடறியச் சொல்லு மேலே

நாமணக்க பாடும் போலே

கூட கலந்திட்ட ஹாசம் பறந்திடும்

கோலாகலத்துக் கப்பாலே (கோவிந்த)

No comments:

Post a Comment