சொல்லுவோம் ஶ்ரீராம நாமம்
Ayiram kann podhadhu... ragam
Ayiram kann podhadhu... ragam
பல்லவி
சொல்லுவோம் ஶ்ரீராம நாமம் ஒன்றையே
வெல்லுவோம் கரும வினைப்பயன் அனைத்துமே
வெல்லுவோம் கரும வினைப்பயன் அனைத்துமே
அனுபல்லவி
நல்லவர் வாழவும் தீயவர் மாயவும்
வில்லெடுத்த கேசவன் கோதண்டராமன்
வில்லெடுத்த கேசவன் கோதண்டராமன்
சரணம்
புல்லுமாயுதமாம் அவனது கை புகுந்தால்
கல்லும் கன்னியாய் மலருமவன் காலடியில்
கல்வியும் செல்வமும் நல்வாழ்வும் பெறுவோம்
கல்யாணராமனவன் திருநாமம் தினம் துதித்தால்
கல்லும் கன்னியாய் மலருமவன் காலடியில்
கல்வியும் செல்வமும் நல்வாழ்வும் பெறுவோம்
கல்யாணராமனவன் திருநாமம் தினம் துதித்தால்
No comments:
Post a Comment