Friday, 3 May 2019

பாக்யாத_லக்ஷ்மி_பாரம்மா

பாக்யாத லக்ஷ்மி பாரம்மா
நம்மம்மா தேவி
நீ சௌபாக்யாத லக்ஷ்மி பாரம்மா
நம்மம்மா நீ சௌபாக்யாத லக்ஷ்மி பாரம்மா

சரணம்

ஹெஜ்ஜேமேலே ஹெஜ்ஜேயனிகுட
கெஜ்ஜகாலனி த்வனியன டோருட
சஜ்ஸன சாது பூஜய வேளகே
மஜ்ஜிக வொளகின பெண்ணையன்டே.................(பாக்யாத)

கனகவிருஷ்டியா கரயுதபாரே
மனகே மானவ சித்திய டோரே
தினகர கோடி தேஜடி ஹெளயுவா
ஜனகராயன குமாரி வேத...............................................(பாக்யாத)

அட்டிதகலத பக்தர மனயளி
நித்ய மஹோத்ஸ்வ சுமங்கல
சத்யவடோருவ சாது சஜ்ஜன
சிட்டடி ஹோளுவ புட்டலி மொம்பே.....................(பாக்யாத)

சங்கே இல்லத பாக்யவ கொட்டு
கங்கண கைய திருவுடபாரே
குங்குமாங்கித பங்கஜ லோசன
வெங்கட ரமணன பெங்கட ராணீ ..................................(பாக்யாத)

சக்ரே துப்பர காலுவே ஹரிசுத
சுக்ரவாரதா பூஜய் வேளகே
அக்கரயுள்ள அளகிரி ரங்கன
சொக்க புரந்தர விட்டலன ராணீ.................................(பாக்யாத)

பாக்கியங்களைத் தரும் லக்ஷ்மியே வருவாய்,எங்களுடைய தாயே நீ சகல சௌபாக்கியங்களை அள்ளித்தர வருவாய் அம்மா.
இரண்டுகால்களிலும் சலங்கையும் கொலுசுவும் கலீர் கலீர் என்று ஒலிக்கும் சப்தத்துடன் நல்ல சாது ஜனங்கள் பூஜை செய்யும் வேளையில் தயிர் கடையும்போது வரும் வெண்ணயைப்போல் வருவாய் அம்மா
உன் கைகளில் தங்கமழை பொழிந்து எங்களின் விருப்பத்தைத் தீர்ப்பாய்

கோடி கோடி சூர்யனுக்கு ஒப்பான காந்தியுடன் கூடிய ஜனகமஹாராஜனின் மகளாக மண்ணில் அவதரித்த லக்ஷ்மிதாயே வாருவாய் அம்மா.

எங்கள் வீட்டுக்கு வந்த நீ வேறு எங்கும்போகமல் இங்கேயே இருந்து தினசரி நடக்கும் மகோன்னத பூஜையில்கலந்து சாது ஜனங்ளை காத்தருள்வாய் அம்மா.கைகளில் தங்க கங்கணங்களை அணிந்து சப்தத்துடன் குங்குமத்தினால் சிவந்த முகத்தில் சிவந்த தாமரை புஷ்பங்கள் பூத்திருப்பதுபோல் அழகிய கண்களுடனுடைய அந்த திருப்பதி மலை மேல் இருக்கும்வெங்கட்ரமணனுடைய ராணீயாகிய எங்கள் அம்மாவே

வருவாய்.வெள்ளிக்கிழமையன்று உனக்கு சக்கரையுடன் பாலும் அரிசியும் கலந்து சக்ரபொங்கல் செய்து உனக்கு படைத்து பூஜைகள் செய்யும் வேளயில் இந்த புரந்தர தாசனால் பாடப்படும் அளகிரி மலை மேல் இருக்கும் ரங்கன்னனின் மனதிற்குகந்த ராணீயே வருவாய் எங்கள் வீட்டிற்கு

No comments:

Post a Comment