Thursday 8 April 2021

காஞ்சி சங்கரா…

 காஞ்சி சங்கரா…. குரு காஞ்சி சங்கரா… 

காஞ்சி காமகோடி பீட சந்த்ர சேகரா 

(காஞ்சி…) 


காஞ்சியிலே கோயில் கொண்ட ஜெகத்குருநாதா 

காமகோடி பீடேஸ்வர சந்த்ர சேகரா 


அயன் எழுத்தை மாற்றவல்ல அம்புஜ நேத்ரா 

கயல் விழியாள் காமாக்ஷீ ரூபி சங்கரா 

(காஞ்சி…) 


சேய்களிங்கு செந்தணலில் துடித்து நிற்கிறோம் 

தாயுந்தன் தயவுதேடி தவித்து நிற்கிறோம்


பாவிகளைப் பார்த்த பின்பும் பரிவு மில்லையோ? 

தாவிவந்து காத்திடவே தயவு மில்லையோ? 

(காஞ்சி…) 


ஓடிவந்தே காட்சிதந்து ஆட்சி செய்பவா 

துணிவு தந்து துயரந்தீர்க்கும் தூய மன்னவா 


வேதகீத நாதமுடன் பாதந் தொழுகின்றோம் 

வாதரோக தோஷமெல்லாம் போக்கியருள வா 

(காஞ்சி…) 


No comments:

Post a Comment