என்ன தமிழ் பாடினாலும்
எந்தன் மனம் நிறையவில்லை
ஈடில்லா தெய்வம் காஞ்சி
சங்கரன் வடிவில் உன்னை
(என்ன தமிழ்....)
நீருள்ள வரைதனிலே பூ மணக்கும் - தேவா
நீயிருந்து காத்திடவே புவி என்றும் பிழைத்திருக்கும்
(என்ன தமிழ்...)
கதியென உனையன்றி ஏதுண்டு தரணியிலே
அற்புதம் அருள்வாய் நீயே - விஜயேந்திரரே
பக்தரை காத்தருள்வாயே
(கதியென...)
வடிவான நங்கையுடனே நாதியனாம் சிவப்பொருளாய்
ஞாலமிதை காப்பாய் நீயே - ஜகதீஸ்வரரே
நேயமொடு அருள்வாய் நீயே
(வடிவான...)
பொற்பதமும் பற்றித் தொழுதேன்
புனிதமும் பெறவேண்டி
மங்களம் அருள்வாய் நீயே - சர்வேஸ்வரரே
என் குலம் காத்தருள்வாய்
(என்ன தமிழ் ...)
No comments:
Post a Comment