Monday 1 March 2021

சங்கர கீதம்

 

  மந்திர முதல்வனை மங்கல வுருதனை 

        சத்சிவ புதல்வனை ….. அடிபேணி 


முப்புர மெரித்தவ னற்புத மனையவள் 

        புத்திர  மதியொளி ……. அருள்கூடி 


சித்தமு மொளிபட சிந்தையி லுருவகை 

        செப்பிடு வருட்புகழ் …. இதனூடே 


சித்துரு சிவபுரச் சங்கர கழநிழல் 

        பற்றிட வழகுற ….. மனதார 


இச்செக முறநெறி நற்திற முடனுரை 

        செப்பிய முனிவனின்…. புகழ்பாட 


செப்பிடு குருப்புகழ் சத்திய மொழியதில் 

        நித்தமு மெழுதிட …… வழிதாராய்!


பித்தமுள் ளெம்மனம்  போற்றிடு வகையென 

        சித்தமுஞ் சீர்படு ….. மொளிகூட 


முத்தமிழ் அழகனின் முத்திரை யுடையவ 

        ரொற்றியு மெழுதிட ….. அருள்வாயே!


No comments:

Post a Comment