வனமாலி வாசுதேவ மனமோஹன ராதா ரமணா
சசிவதனா சரஸிஜநயனா ஜகன்மோஹன ராதா ரமணா
பாற்கடலில் பள்ளிகொண்ட பரந்தாமா ராதாரமணா
பக்தர்களில் குறைதீர்க்கும் ஸ்ரீரங்கா ரதராமணா | |
வனமாலி...
வெண்ணனையுண்ட மாயவனே கண்ணா நீ ராதாரமணா
வேண்டும்வரம் தந்திடுவாய் ஸ்ரீரங்கா ராதாரமணா | |
ராதா ரமணா
வனமாலி..
___________
ரகுபதி ராகவ ராஜாராம் ! பதீத பாவன சீதாராம் !
ஈஸ்வர அல்லா தேரே நாம் ! சப்கோ சன்மதி தே பகவான் !
ராம ராம ஜய ராஜா ராம்..
ராம ராம ஜய சீதாராம்..
________
சின்ன சின்ன பதம் வைத்து கண்ணா நீ வா வா வா
வண்ண வண்ண உடை உடுத்தி கண்ணா நீ வா வா வா
மணிவண்ணா நீ வா வா வா…(சின்ன)
மல்லிகை முல்லை மலராலே அர்சணை செய்வோம் வா வா வா
மாதவனே கேசவனே யாதவனே நீ வா வா வா…(சின்ன)
திரௌபதி மானம் காத்தவனே தீனஸரண்யா வா வா வா
காலமெல்லம் உன் அருளை வேண்டுகிறொம் நீ வா வா வா…(சின்ன)
கண்ணில் தெரியும் காட்சியெல்லம் கமலக்கண்ணா உன்தொற்றம்
கண்ணழகா மணிவண்ணா கண்ணா நீ வா வா வா…(சின்ன)
_________________
வாவா முருகையா..வடிவேல் அழகா..வாவாவா குமரா
திருக்கார்த்திகேயா..(வாவா)
சிங்கார வேலா..சிவசக்திபாலா
சங்கீத லோலா
ஹேசுவாமிநாதா
வாவா முருகா வடிவேல் அழகா
____________
வருவாய் வருவாய் வருவாய் அம்மா..திருவே உருவாய் வருவாய் அம்மா..(2)
கல்யாணி கருமாரி காமாட்சி நீயே..
மகாலக்ஷ்மி மாதங்கி மீனாக்ஷி நீயே..
வரலக்ஷ்மி வாராஹி விசாலாட்சி நீயே..
உலகாளும் மாயே..மகமாயி தாயே..
அம்மா அம்மா அம்மா அம்மா(2)
கோவிந்த கிருஷ்ணா..ஸ்ரீஹரி கோபால கிருஷ்ணா
பாண்டுரங்க கிருஷ்ணா..ஸ்ரீஹரி பண்டரிபுர கிருஷ்ணா
கோ.ராதே..ஸ்ரீஹரி கோபால...
கோ.கண்ணா..ஸ்ரீஹரி
கோ.விட்டல்..ஸ்ரீஹரி
Velava Velava Vel Muruga Vaa Vaa
Velava Velava Vel Muruga Vaa Vaa
Vel Muruga Vaa Vaa Vadi Vel Muruga Vaa Vaa
Velava Shanmukha Muruga Muruga
Valli Manavala Kunjari Manala
Deva Kunjari Manala
Vanna Mayil Vahana Muruga Muruga
Sooradhi Soora Subramanya Deva
Deva Subramanya Deva
Shanmukha Saravana Muruga Muruga
__________
கோவிந்த கோவிந்த ராதா முகுந்தா
முரளீதரா நந்த சந்த்ரா - ஹரே
மதுசூதனா கோகுலேந்திரா
எங்கள் கோலாகலம் கண்ட ப்ருந்தாவனா
நந்த கோபிஜனா போதிசந்த்ரா (கோவிந்த)
காயத்தினை நொந்து கர்மம் கசந்துபின்
கதியினை தேடத்தகாதே
அதைக் கருத்தினில் கொள்ளப் புகாதே
சாகும் காலத்தினைச் சொல்லி நேரத்தில்
பாதியை கனவென்றுவிட்டு விடாதே (கோவிந்த)
கண்ணால் அவன் உருநாடு - இரு
கண்ணால் அவன் உருநாடு - நல்ல
பண்ணால் அவன் புகழ்நாடு - இரு
கையாலே தாளங்கள் போடு - இரு
காலால் அடஒன்று ஆடு - அந்த
காலன் வந்தால் என்ன நேரில் அவன்
கையில் தாளத்தைக் கொண்டு போய் போடு (கோவிந்த)
நித்யம் அநித்யம் பரத்வம் வசித்வம்
என்றென்றும் புரியாது போபோ
நேரம் எனக்கேது இப்போ
எங்கள் நீலநிறக் கண்ணன் நாமத்தைப்
பாடிடும் ஆனந்தத்திற்கீடில்லை இப்போ
நேரத்தகும் என்று சொல்லு இந்த
நெஞ்சில் அவன் உருகொள்ளு இன்னும்
கூட ஒரு தரம் சொல்லு பலகோடி பழவினை தள்ளு
கோடி கொடுத்தாலும்
பொன்பல கோடி கொடுத்தாலும் பாடும்
பிறவிகள் கூடக் கிடைக்குமோ சொல்லு (கோவிந்த)
பாடக் கிடைத்த நா ஒன்று தாளம்
போடக் கிடைத்த கை இரண்டு
இன்னும் கூடும் கிரணங்கள் மூன்று
வேதம் கோடி எனப்படும் நான்கு வேதம் நான்கு
இந்த குற்றமற்ற சுகம் மற்றவர்க்குச்
சொன்னால் கொள்ளை தான் போகாதே
ஐந்து புலன் ஐந்து (கோவிந்த)
கையில் கிடைத்திட்ட கன்னல்கனிச்
சாற்றை மெய்யே சுடைக்கப்படாதே
அதை கருத்தினில் கொள்ளப் புகாதே
வெறும் காலங்கள் கோளங்கள் அவை
இவை என்று சொல்லி
காலனின் வசப்படாதே - கொடும்
காலனின் வசப்படாதே (கோவிந்த)
பச்சை நிறம் பட்டமேனி தரங்கண்டு
பாடி கிடைந்திட்ட போதே
நம்மை பழவினை ஒன்றும் செய்யாதே
இங்கு பண்ணின புண்ணியம் திண்ணம்
பலித்திட பாடிட வரும் தப்பாதே (கோவிந்த)
காணக்கிடைக்காத தங்கம் - கண்ணன்
காணக் கிடைக்காத தங்கம் - இங்கு
கண்டு களிப்பது சத்தங்கம்
இங்கு வேண்டிய அருள் பொங்கும்
நிகரில்லை என்றெங்கும் தங்கும்
கோணக் கோணச் சொல்லி கோவிந்தா
என்றாலும் கூட அருள் தானே பொங்கும் (கோவிந்த)
பாடும் சுகம் ஒன்று போலே - இந்த
பாரில் இல்லை ஆதலாலே
நாடறியச் சொல்லு மேலே
நாமணக்க பாடும் போலே
கூட கலந்திட்ட ஹாசம் பறந்திடும்
கோலாகலத்துக் கப்பாலே (கோவிந்த)
_________
கோவிந்தா ஹரி கோவிந்தா
கோகுல நந்தன கோவிந்தா
ஸ்ரீநிவாசா கோவிந்தா
ஸ்ரீவேங்கடேசா கோவிந்தா
பக்த வத்சலா கோவிந்தா
பாகவத ப்ரிய கோவிந்தா
நித்ய நிர்மலா கோவிந்தா
நீலமேகஸ்யாம கோவிந்தா
புராண புருஷா கோவிந்தா
புண்டரீகாக்ஷா கோவிந்தா
போலோ நாத உமாபதே
சம்போ சங்கர பசுபதே
நந்தி வாகன நாக பூஷண
சந்திரசேகர ஜடாதரா
கங்காதார கௌரி மனோகர
கிரிஜா ரமணா சதாசிவா (போலோ)
கைலாசவாசா கனகசபேசா
கௌரி மனோகர விஸ்வேசா
ஸ்மாசன வாஸா சிதம்பரேசா
நீலகண்ட மஹாதேவா (போலோ)
சூலாதாரா ஜ்யோதிப் பிரகாசா
விபூதி சுந்தர பரமேசா
பம் பம் பம் பம் டமருகநாத
பார்வதி ரமணா சதாசிவா (போலோ)
___________
கிருஷ்ண கிருஷ்ணா முகுந்தா ஜனார்த்தனா
கிருஷ்ண கோவிந்த நாராயணா ஹரே
அச்சுதானந்த கோவிந்த மாதவா
சச்சிதானந்த நாராயணா ஹரே..
__________
தசரத நந்தன ராமராம்
ஜய தசமுக மர்தன...
பசுபதி ரஞ்சன..
ஜய பாப விமோசன...
மணிமய பூஷண...மஞ்சுள பாஷண...ரணஜய ரக்ஷக ...
ராக்ஷஸ காசக ராமராம்
__________
சித்த சோரா யசோதாகே லால்
நவநீத சோர கோபால்..(2)
கோபால் கோபால் கோபால் கோபால்
கோவர்த்தன தர கோபால்..
ஹரிநாராயண கோவிந்தா
ஜெயநாராயண கோவிந்தா
ஹரிநாராயண ஜெயநாராயண
ஹரிகோவிந்தா கோவிந்தா.
பக்த ஜனப்ரிய கோவிந்தா
பங்கஜ லோசன கோவிந்தா
பக்தஜனப்ரிபங்கஜலோசன
பரமானந்தா கோவிந்தா.
தசரதநந்தன கோவிந்தா
தசமுகமர்த்தன கோவிந்தா
தசரதநந்தனதசமுகமர்த்தன
சதமகஸேவித கோவிந்தா.
கமலா வல்லப கோவிந்த
கமல விலோசனகோவிந்தா
கமலா வல்லப
கமலவிலோசன
கலிமலநாசன கோவிந்தா
_____
தினம்தினம் முருகனையே நினை மனமே-நம்
கஷ்டங்களைப்போக்கிடுவான் நம்பு மனமே
பக்தியுடன் பாட வேண்டும் நினை மனமே
பரவசமாய் ஆட வேண்டும் நினை மனமே
பழனிமலை பாலனையே நினை மனமே
சவாமிமலை நாதனையே நினை மனமே
எட்டுக்குடி வேலனையே நினை மனமே
சிக்கல் சிங்காரனையே நினை மனமே (தினம்)
திருப்போரூர் குமரனையே நினை மனமே
திருச்செந்தூர் முருகனையே நினை மனமே
திருத்தணிகை ஈசனையே நினைமனமே
வள்ளிமலை வாசனையே நினைமனமே (தினம்)
No comments:
Post a Comment