குஞ்சித சங்கரத் திருவுரு கண்டால்
துயர்தரும் ரோகமும் விலகிடுதே
குவலய வாழ்விதும் விளங்கிடுதே
ஜகத்குரு திருப்பதம் சரண்புகுந்தாலே
செகமிதில் வாழ்நிலை உயர்ந்திடுமே
(1)
செகம்புகழ் மேனியன் தவவுரு கண்டால்
பிழறாப் புண்ணியம் கூடிடுதே
பரமானந்தம் நிறைந்திடுதே
ஜகத்குரு திருப்பதம் சரண்புகுந்தாலே
செகமிதில் வாழ்நிலை உயர்ந்திடுமே
(2)
அகமகிழ் வரமருள் குருவுரு கண்டால்
மனமகிழ் வென்றும் நிலைபெறுதே
மனமதில் தருமமும் நிறைந்திடுதே
ஜகத்குரு திருப்பதம் சரண்புகுந்தாலே
செகமிதில் வாழ்நிலை உயர்ந்திடுமே
(3)
துளசியும் வில்வமும் தவழ்வுரு கண்டால்
தரணியில் நெறிபல வளம்பெறுதே
தன்னொளி கூடியும் திகழ்ந்திடுதே
ஜகத்குரு திருப்பதம் சரண்புகுந்தாலே
செகமிதில் வாழ்நிலை உயர்ந்திடுமே
(4)
சசிசேகர குரு திகழுரு கண்டால்
சங்கடம் யாவையும் அகன்றிடுதே
சன்மார்க்கம் மனம் உணர்ந்திடுதே
ஜகத்குரு திருப்பதம் சரண்புகுந்தாலே
செகமிதில் வாழ்நிலை உயர்ந்திடுமே
(5)
பரவொளி படரொளி திருவுரு கண்டால்
பக்தியும் நெஞ்சினில் பெறுகிடுதே
பண்பட வாழ்வும் உயர்ந்திடுதே
ஜகத்குரு திருப்பதம் சரண்புகுந்தாலே
செகமிதில் வாழ்நிலை உயர்ந்திடுமே
(6)
வலக்கரம் வாழ்த்தும் வகையுரு கண்டால்
வந்தனம் செய்மனம் மகிழ்ந்திடுதே
வாழ்வினில் இன்பமும் கூடிடுதே
ஜகத்குரு திருப்பதம் சரண்புகுந்தாலே
செகமிதில் வாழ்நிலை உயர்ந்திடுமே
(7)
எளிமையும் சாந்தமும் எழிலுரு கண்டால்
ஏக்கமும் தீர்ந்தருள் கூடிடுதே
ஏழ்மையும் தீமையும் விலகிடுதே
ஜகத்குரு திருப்பதம் சரண்புகுந்தாலே
செகமிதில் வாழ்நிலை உயர்ந்திடுமே
(8)
பங்கஜ பார்கவி திகழுரு கண்டால்
காமாக்ஷி அருள் ஒளிதருதே
கருணையும் வாழ்விதைக் காத்திடுதே
ஜகத்குரு திருப்பதம் சரண்புகுந்தாலே
செகமிதில் வாழ்நிலை உயர்ந்திடுமே
(9)
சங்கர சன்னதி திருவுரு கண்டால்
சங்கர கோஷமும் பெறுகிடுதே
சந்ததம் நெஞ்சினைத் தூய்த்திடுதெர்
ஜகத்குரு திருப்பதம் சரண்புகுந்தாலே
செகமிதில் வாழ்நிலை உயர்ந்திடுமே
(10)
அருட்கடல் அயராத் தவவுரு கண்டால்
தமிழொலி எங்கிலும் பரவிடுதே
தவமாய் கோஷமும் விளங்கிடுதே
ஜகத்குரு திருப்பதம் சரண்புகுந்தாலே
செகமிதில் வாழ்நிலை உயர்ந்திடுமே
(11)
சிவகுரு நந்தனத் திருவுரு கண்டால்
சித்தமும் தூய்ந்தெழில் பெற்றிடுதே
திவ்வியன் திருவருள் காத்திடுதே
ஜகத்குரு திருப்பதம் சரண்புகுந்தாலே
செகமிதில் வாழ்நிலை உயர்ந்திடுதே
(12)
No comments:
Post a Comment