Thursday, 4 March 2021

ஹர ஹர சங்கர... ஜய ஜய சங்கர...

 

சுட்டும் விழிச் சுடரே - சங்கரா 

சுந்தரப் புன்னகையே 

விட்ட வழி நினதே – எமக்கு 

சுகமருட் சுந்தரனே 

கட்டும் விதிவலியை கலைந்தே 

காத்தருள் புரிகுவையோ 

நட்ட நடு வாழ்வாம் கடலில் 

கரையேற் றருள் குருவே! 


காலைக் கதிரொளியோ – சங்கரா 

கருணை பொழிமுகமோ 

மேலைக் கடலொலியாய் மனமும் 

ஏங்கித் தவிக்குதையா 

தாளைப் பற்றினமே – எமக்கு 

தன்னொளி புரிகுவையோ 

சோலை மலர் மணமாய் வாழ்வில் 

சுகமதும் தந்தருளே! 


மோனத் தவ உருவே – சங்கரா 

மூத்தோர் திருவுருவோ 

ஞானக் கடல் ஒளியாய் ஞாலம் 

காக்கவும் வந்தனையோ 

கானம் இசைத்து முன்னை நாளும் 

கண்டு துத்தனமே 

தானம் தரும வளம் தரணியில் 

தழைத்திட அருள் குருவே!

No comments:

Post a Comment