ஈசனோடு பேசியது போதுமே
என்னோடும் பேசு சாமிநாதா
ஈசனோடு பேசியது போதுமே
என்னோடும் பேசுசாமி நாதனே
ஆசையோடு தமிழெடுத்துப் பாடினேன்
ஐயாஉன் திருவடியை நாடினேன்
கண்சீறும் பொறியூறி பிறந்தவா
கமலத்தில் அன்று நீயும் தவழ்ந்தவா
தண்ணீரில் சளியுனக்குப் பிடிக்குமே
சரவணத்துப் பொய்கைவிட்டு எழுந்துவா
கடலோரம் நிற்பவனே சண்முகா
கடல் நீரால் உடல் அரிக்கும் அல்லவா
நடமாடும் மயிலேறி இங்குவா
நல்ல மனக் கோயிலுண்டு தங்கவா
குன்றத்திலே கல்யாணம் ஆனதால்
குவலயத்தை நீமறத்தால் நியாயமா
குன்றத்தையும் விட்டிறங்கி ஓடிவா
கொஞ்சு தமிழ் இசைகேட்டு ஆடிவா
பன்னிரண்டு கண்களாடுந் தெய்வமே
என்னை மட்டும் காணமனம் இல்லையோ
உன்னை விட்டு யாரை இனி நம்புவேன்
சண்முகனே என்னுடனே வம்புஏன்
ஒன்றிரண்டு விழியேனும் திறந்திடு
ஓரவிழிப் பார்வையேனும் புரிந்திடு
என்றுமுனை நம்பிநின்றேன் வரங்கொடு
ஏற்றமுடன் யான் வாழ வரங்கொடு.
தினம்தினம் முருகனையே நினை மனமே-நம்
கஷ்டங்களைப்போக்கிடுவான் நம்பு மனமே
பக்தியுடன் பாட வேண்டும் நினை மனமே
பரவசமாய் ஆட வேண்டும் நினை மனமே
பழனிமலை பாலனையே நினை மனமே
சவாமிமலை நாதனையே நினை மனமே
எட்டுக்குடி வேலனையே நினை மனமே
சிக்கல் சிங்காரனையே நினை மனமே (தினம்)
திருப்போரூர் குமரனையே நினை மனமே
திருச்செந்தூர் முருகனையே நினை மனமே
திருத்தணிகை ஈசனையே நினைமனமே
வள்ளிமலை வாசனையே நினைமனமே (தினம்)
______________
Velava Velava Vel Muruga Vaa Vaa
Velava Velava Vel Muruga Vaa Vaa
Vel Muruga Vaa Vaa Vadi Vel Muruga Vaa Vaa
Velava Shanmukha Muruga Muruga
Valli Manavala Kunjari Manala
Deva Kunjari Manala
Vanna Mayil Vahana Muruga Muruga
Sooradhi Soora Subramanya Deva
Deva Subramanya Deva
Shanmukha Saravana Muruga Muruga
__________
No comments:
Post a Comment