Monday, 1 March 2021

சங்கர கீதம்

 "சந்த்ரசேகரா சந்த்ரசேகரா சந்த்ரசேகரா நமஸ்காரம் 

சந்த்ரசேகரா சந்த்ரசேகரா சந்த்ரசேகரா நமஸ்காரம்" 

சத்திய மிவரைச் சிந்தனை செய்தால் 

சகலமும் நடந்திடும் சடுதியிலே! 

சித்தமுந் தூயுறு பத்தியும் செய்தால் 

சங்கடம் தீர்ந்திடும் வாழ்வினிலே! 

(1) 

"சந்த்ரசேகரா சந்த்ரசேகரா சந்த்ரசேகரா நமஸ்காரம் 

சந்த்ரசேகரா சந்த்ரசேகரா சந்த்ரசேகரா நமஸ்காரம்" 

அம்பர மாடிடும் ஆடவல் லானருள் 

அஞ்சுக மேற்றிடும் வாழ்வினிலே! 

அம்பல மோடியு மஞ்சுகத் தாளதைக் 

கண்டிட மங்களம் ஓங்கிடுமே! 

(2) 

"சந்த்ரசேகரா சந்த்ரசேகரா சந்த்ரசேகரா நமஸ்காரம் 

சந்த்ரசேகரா சந்த்ரசேகரா சந்த்ரசேகரா நமஸ்காரம்" 

மும்மல மாயை மதிகெடு இருளும் 

மன்னவன் வரமும் தீர்த்திடுமே! 

பூதல மாமகன் பொன்னுரு கண்டிட 

பூவுல கெங்கிலும் மகிழ்ந்திடுமே! 

(3) 

"சந்த்ரசேகரா சந்த்ரசேகரா சந்த்ரசேகரா நமஸ்காரம் 

சந்த்ரசேகரா சந்த்ரசேகரா சந்த்ரசேகரா நமஸ்காரம்" 

மா’தவ மானுட தெய்வமு மிங்கே 

ஆறுதல் தந்திட வந்ததுவே! 

ஆதவன் அருளென ஞானமுந் தந்திட 

மா’குரு மந்திரம் போற்றுவமே! 

(4) 

"சந்த்ரசேகரா சந்த்ரசேகரா சந்த்ரசேகரா நமஸ்காரம் 

சந்த்ரசேகரா சந்த்ரசேகரா சந்த்ரசேகரா நமஸ்காரம்" 

சாதியும் பேதமு மேதுமிலா தொரு 

சங்கர சன்னதி நாடுவமே! 

நாதியும் நற்கதி யாகவு மேவிடும் 

சசிசேகர பதம் போற்றுவமே! 

(5) 

"சந்த்ரசேகரா சந்த்ரசேகரா சந்த்ரசேகரா நமஸ்காரம் 

சந்த்ரசேகரா சந்த்ரசேகரா சந்த்ரசேகரா நமஸ்காரம்" 

வாரண மாயிர மொளியரு ளாசியும் 

செகத்குரு சங்கரன் தந்திடவே 

காரண காரியம் யாவிலும் வெற்றியும் 

கூடிட வாழ்வினில் ஓங்குவமே! 

(6) 

"சந்த்ரசேகரா சந்த்ரசேகரா சந்த்ரசேகரா நமஸ்காரம் 

சந்த்ரசேகரா சந்த்ரசேகரா சந்த்ரசேகரா நமஸ்காரம்" 

நானென தின்றி தானது மின்றி 

சாதகம் புரிதல் நன்றாமே! 

நாதனுன் நாமம் நாவினில் பரவிட 

நாயகமே அருள் புரிவாயே! 

(7) 

"சந்த்ரசேகரா சந்த்ரசேகரா சந்த்ரசேகரா நமஸ்காரம் 

சந்த்ரசேகரா சந்த்ரசேகரா சந்த்ரசேகரா நமஸ்காரம்" 

சேயென துள்ளம் தாய்நீ யறிவாய் 

சோர்வதும் நீங்கிட சுகமருள்வாய்! 

பார்திகழ் காஞ்சியின் பேரிறை பரமே 

பவவினை நீங்கிட அருள்வாயே! 

(8) 

"சந்த்ரசேகரா சந்த்ரசேகரா சந்த்ரசேகரா நமஸ்காரம் 

சந்த்ரசேகரா சந்த்ரசேகரா சந்த்ரசேகரா நமஸ்காரம்"

No comments:

Post a Comment