Sunday, 28 June 2020

ஹர ஹர சங்கர... ஜய ஜய சங்கர.

ஹரஹர சங்கர ஜயஜய சங்கர
காஞ்சி மடேச்வர பாலயமாம்
குருபதி சுந்தர குருசசி சேகர
வாஞ்சித தாயக ரக்ஷமாம்

அடிமுடி காணாக் கண்டனி னுருவினில்
குஞ்சித சங்கரனே!
வடிவுடை சாந்தம் சங்கடம் போக்கிடும்
சசிசேகர குருநீயே!
(1)

படர்தரு இருளில் பரிதியு மாகியெம்
பழவினை போக்கிடுவாய்!
சுடர்தரு அமுதே சுந்தர வடிவே
சுகமுடன் வாழ்வருள்வாய்!
(2)

ஜதிதனி லேத்தும் பத்தியிற் பாடும்
துதியிதை ஏற்றருள்வாய்!
மதிமுக மங்கள மஞ்சுள வரதா
மதிதனை தந்திடுவாய்!
(3)

வருவினை கடந்து குருவுனைக் கண்டிட
வரமதும் அருளிடுவாய்!
அருளதன் பயனால் குலமதும் ஓங்கிட
திருவருள் புரிந்திடுவாய்!
(4)

அருதிரு மருகா திருமகள் புதல்வா
சன்னதி நாடிடுவோம்!
குருவவுன தருளால் குவலயம் செழிக்க
குருப்புகழ் பாடிடுவோம்!
(5)

குருபர னுந்தன் திருவடி சரணம்
பவபயம் அகற்றிடுமே!
திருவடி நிழலும் தினப்படி தொழவும்
குருவருள் வேண்டினமே!
(6)

செகமிது விளங்க செகத்குரு நின்துணை
நித்தமும் வேண்டுகிறோம்!
செகவுற வெல்லாம் விளங்கிட வேண்டி
துதியிதைப் பாடுகிறோம்!
(7)

சந்திர மௌளி திரிபுர சுந்தரி
கருணையின் ஓருருவாய்
சந்திர சேகர குருபர னேயெமைக்
காத்தருள் புரிந்திடுவாய்!
(8)

ஹரஹர சங்கர ஜயஜய சங்கர
காஞ்சி மடேச்வர பாலயமாம்
குருபதி சுந்தர குருசசி சேகர
வாஞ்சித தாயக ரக்ஷமாம்




#ஸ்ரீகுருகானம்
#நாமநாதம்

சம்போ சங்கர கௌரீசா
சாம்ப சதாசிவ பரமேசா
சற்குரு சங்கர சர்வக்ஞா
சரணம் சரணம் குருநாதா

ஜய ஜய சங்கர தயாபரா
ஜய குரு நாதா க்ருபாகரா

காஞ்சீ சங்கர சதாசிவா
கற்பக வத்ஸல சிவரூபா
வாஞ்சி தாயக பதிநேயா
சரணம் சரணம் குருநாதா

ஜய ஜய சங்கர தயாபரா
ஜய குரு நாதா க்ருபாகரா

சம்பூ சங்கரீ தவரூபா
சங்கட சம்ஹர குருதேவா
ப்ரபு ப்ராணபதி ஜகந்நாதா
சரணம் சரணம் குருநாதா

ஜய ஜய சங்கர தயாபரா
ஜய குரு நாதா க்ருபாகரா

ஆதி மூலமே அவதூதா
அம்பல மேவிடும் மறைநாதா
அனாத ரக்ஷக சதுர்வேதா
சரணம் சரணம் குருநாதா

ஜய ஜய சங்கர தயாபரா
ஜய குரு நாதா க்ருபாகரா

அண்டம் காத்திடும் அதிரூபா
அவனியர் போற்றும் அமுதீசா
சாந்த ஸ்வரூபா ப்ரபோபதே
சரணம் சரணம் குருநாதா

ஜய ஜய சங்கர தயாபரா
ஜய குரு நாதா க்ருபாகரா

ஆரண அரசே வருவீரே
ஆதி சங்கரனே அருள்வீரே
அதிகுண முர்த்தி அவிநாசீ
சரணம் சரணம் குருநாதா

ஜய ஜய சங்கர தயாபரா
ஜய குரு நாதா க்ருபாகரா

மஹா தேவ ஸ்ரீ குருநாதா
மாத்ரு பூதனே மஹாகுணா
மண்டல குலபதி மதிசூடா
சரணம் சரணம் குருநாதா


Tuesday, 23 June 2020

கலியுக வரதன்..

கலியுக வரதன் கண் கண்ட தெய்வமாய்
காட்சியளிப்பது பழனியிலே (கலியுக)

மலைமகள் அருளிய சக்திவேல் முருகன்
மரகத வண்ணனாம் திருமால் மருகன் (கலியுக)

கண்ணுதற் கடவுளின் கண்மணியாய் வந்தார்
கார்த்திகைப் பெண்டிர்கள் அணைப்பில் வளர்ந்தார்
விண்ணவர் குறையெல்லாம் நொடியில் களைந்தார்
வேண்டுவோர் வேண்டுமுன் வரமெல்லாம் தந்தார் ... !!!
(கலியுக)

காமகோடி பீடந்தனில்

ஜய ஜய சங்கரா…. ஹர ஹர சங்கரா….

ஸ்ரீகுருகானம்

(ஆயற்பாடி மாளிகையில் மெட்டில்….)

காமகோடி பீடந்தனில் காஞ்சியிலே சன்னதியில்
சாந்தரூபன் தரிசனமும் கண்டீரோ

காமகோடி பீடந்தனில் காஞ்சியிலே சன்னதியில்
சாந்தரூபன் தரிசனமும் கண்டீரோ
அவர் கருணைமிகு காந்தியினை கண்டவர்க்கு குறையுமில்லை
வாழ்விளங்க தரிசனமும் கண்டீரோ
வாழ்விளங்க தரிசனமும் கண்டீரோ

காமகோடி பீடந்தனில் காஞ்சியிலே சன்னதியில்
சாந்தரூபன் தரிசனமும் கண்டீரோ

ஏலமுத்து மாலையுடன் சந்தனமும் சார்த்திக்கொண்டு
ஆலவாயன் அமர்ந்திருக்கக் கண்டீரோ
ஏலமுத்து மாலையுடன் சந்தனமும் சார்த்திக்கொண்டு
ஆலவாயன் அமர்ந்திருக்கக் கண்டீரோ

அந்த சன்னதியில் கூடியவர் சங்கடங்கள் ஓடிவிடும்
சந்ததமும் ஒளிவிளங்கக் கண்டீரோ
சந்ததமும் ஒளிவிளங்கக் கண்டீரோ


காமகோடி பீடந்
காஞ்சியிலே சன்னதியில்
சாந்தரூபன் தரிசனமும் கண்டீரோ

நாதவொலி கூட்டி அங்கு நான்மறையும் ஓதிடவே
பேதமெல்லாம் மறைவதையும் கண்டீரோ
நாதவொலி கூட்டி அங்கு நான்மறையும் ஓதிடவே
பேதமெல்லாம் மறைவதையும் கண்டீரோ

அவர் மோனநிலை கூட ஒரு யோகநிலை போலிருக்க
காண்பவர்க்கும் அருள்வதையும் கண்டீரோ
காண்பவர்க்கும் அருள்வதையும் கண்டீரோ

காமகோடி பீடந்தனில் காஞ்சியிலே சன்னதியில்
சாந்தரூபன் தரிசனமும் கண்டீரோ

மன்னனவன் வாய்திறந்தால் மண்டலமும் மகிழ்ந்திருக்கும்
மங்களத்தின் மதிவதனம் கண்டீரோ
மன்னனவன் வாய்திறந்தால் மண்டலமும் மகிழ்ந்திருக்கும்
மங்களத்தின் மதிவதனம் கண்டீரோ

அவர் பொன்னழகைக் கண்டவர்க்குள் பேதமெல்லாம் நீங்கிவிடும்
மகிமைதனைச் சன்னதியில் கண்டீரோ
மகிமைதனைச் சன்னதியில் கண்டீரோ

காமகோடி பீடந்தனில் காஞ்சியிலே சன்னதியில்
சாந்தரூபன் தரிசனமும் கண்டீரோ – ஜகத்குரு
சங்கரனின் தரிசனமும் கண்டீரோ!

எப்படிப் பாடினரோ

ஸ்ரீ ஜெயேந்த்ர பெரியவா அருளிய குரு வந்தன ஸாஹித்யம்

எப்படிப் பாடினரோ - குரு நாதனை  அப்படிப் பாட நான் ஆசை கொண்டேன் குருவே

தோடகரும் பத்மபாதரும் சுரேஸ்வராச்சார்யரும் ஹஸ்தாகமச் சார்யரும் சங்கர குருநாதனை

காலடியில் உதித்து கால்நடையாய் நடந்து
காசிவரை காமகோடி பீடமமைத்து,
வேற்றுமையில் ஒற்றுமை சொன்ன வேதாந்த வித்தகரை, வேதனைகளை தீர்த்து வைக்கும் சத்குருநாதனை

சிவம் சுபம்.

விழி கிடைக்குமா

விழி கிடைக்குமா அபய கரம் கிடைக்குமா
குரு நாதன் சரணத்தில் நிழல் கிடைக்குமா

அலை மீது அலையாக துயர் வந்து சேரும் போது
அஞ்சாதே எனும் குரலை செவி கேட்குமா (விழி )

கோடி ஜன்மம் நான் எடுப்பேன் குரு உந்தன் அருள் இருந்தால்
உனக்கேன்றே உனக்காக எனை ஆக்குவேன்
நினைக்காத துன்பம் பல எனை வந்து சேரும் போது
நினைத்தாலே அபயம் தரும் கரம் கிடைக்குமா (விழி)

நங்கூரம் போல் குருநாதன் கடை விழி இருக்க இந்த
சம்சார புயல் கண்டு மனம் அஞ்சுமா
நிஜமான அன்பு வைத்து எனதெல்லாம் அடியில் வைத்து
உன் விழியோர படகில் எனக்கிடம் கிடைக்குமா ( விழி)

ஸ்ரீ லக்ஷ்மீ ந்ருஸிம்ஹ அக்ஷரமாலா

ஸ்ரீ லக்ஷ்மீ ந்ருஸிம்ஹ அக்ஷரமாலா :

ஜய ஜய லக்ஷ்மீ ந்ருஸிம்ஹ
ஜய ஹரி லக்ஷ்மீ ந்ருஸிம்ஹ

அனாத ரக்ஷக ந்ருஸிம்ஹ
ஆபத்பாந்தவ ந்ருஸிம்ஹ

இஷ்டார்த்த ப்ரத ந்ருஸிம்ஹ
ஈஷ்பரேஷ ந்ருஸிம்ஹ

உக்ர ஸ்வரூப ந்ருஸிம்ஹ
ஊர்த்வா பாஹூ ந்ருஸிம்ஹ

எல்லா ரூப ந்ருஸிம்ஹ
ஏகாந்த மூர்த்தே ந்ருஸிம்ஹ

ஐஸ்வர்ய ப்ரத ந்ருஸிம்ஹ
ஒளிரும் ஜ்யோதிர் ந்ருஸிம்ஹ

ஓங்கார ரூப ந்ருஸிம்ஹ
ஔஷத நாம ந்ருஸிம்ஹ

அம்பர வாஸ ந்ருஸிம்ஹ
காம ஜனக ந்ருஸிம்ஹ

கிரீடதாரி ந்ருஸிம்ஹ
ககபதி வாஸன ந்ருஸிம்ஹ

கதாதரனே ந்ருஸிம்ஹ
கர்ப்ப நிர்பேதந ந்ருஸிம்ஹ

கிரிதர வாஸ ந்ருஸிம்ஹ
கௌதம பூஜித ந்ருஸிம்ஹ

கடிகாசல ஸ்ரீ ந்ருஸிம்ஹ
ஸதுர் புஜனே ந்ருஸிம்ஹ

ஸதுரா யுத்தர ந்ருஸிம்ஹ
ஜ்யோதி ஸ்வரூப ந்ருஸிம்ஹ

தந்தே தாயியு ந்ருஸிம்ஹ
த்ரிநேத்ர தாரி ந்ருஸிம்ஹ

தநுஜா மர்த்தன ந்ருஸிம்ஹ
தீனநாத ந்ருஸிம்ஹ

துஃக நிவாரக ந்ருஸிம்ஹ
தேவாதி தேவ ந்ருஸிம்ஹ

ஜ்ஞான ப்ரதனே ந்ருஸிம்ஹ
நரஹரி ரூப ந்ருஸிம்ஹ

நர நாராயண ந்ருஸிம்ஹ
நித்யானந்த ந்ருஸிம்ஹ

நாம கிரீஷ ந்ருஸிம்ஹ
நாராயண ஹரி ந்ருஸிம்ஹ

பங்கஜானன ந்ருஸிம்ஹ
பாண்டுரங்க ந்ருஸிம்ஹ

ப்ரஹலாத வரத ந்ருஸிம்ஹ
பிநாகதாரி ந்ருஸிம்ஹ

புராண புருஷ ந்ருஸிம்ஹ
பவபய ஹரண ந்ருஸிம்ஹ

பக்த ஜன ப்ரிய ந்ருஸிம்ஹ
பக்தோத்தார ந்ருஸிம்ஹ

பக்தானுக்ரஹ ந்ருஸிம்ஹ
பக்த ரக்ஷக ந்ருஸிம்ஹ

முனி ஜன ஸேவித ந்ருஸிம்ஹ
ம்ருக ரூப தாரி ந்ருஸிம்ஹ

யக்ஞ புருஷ ந்ருஸிம்ஹ
ரங்கநாத ந்ருஸிம்ஹ

லக்ஷ்மீ ரமணா ந்ருஸிம்ஹ
வங்கி புரீஷ ந்ருஸிம்ஹ

ஸாந்த மூர்த்தி ந்ருஸிம்ஹ
ஷட்வர்க்க தாரி ந்ருஸிம்ஹ

ஸர்வ மங்கள ந்ருஸிம்ஹ
ஸித்தி புருஷ ந்ருஸிம்ஹ

பானக ப்ரிய ந்ருஸிம்ஹ
பங்கஜ நயன ந்ருஸிம்ஹ

ஸங்கட ஹர ந்ருஸிம்ஹ
ஸாளக்ராம ந்ருஸிம்ஹ

ஹரி நாராயண ந்ருஸிம்ஹ
க்ஷேமகாரி ந்ருஸிம்ஹ

ஜய ஜய லக்ஷ்மீ ந்ருஸிம்ஹ
ஜய ஹரி லக்ஷ்மீ ந்ருஸிம்ஹ

ஜய ஜய மங்கள ந்ருஸிம்ஹ
ஜய ஸுப மங்கள ந்ருஸிம்ஹ!