Sunday 28 June 2020

ஹர ஹர சங்கர... ஜய ஜய சங்கர.

ஹரஹர சங்கர ஜயஜய சங்கர
காஞ்சி மடேச்வர பாலயமாம்
குருபதி சுந்தர குருசசி சேகர
வாஞ்சித தாயக ரக்ஷமாம்

அடிமுடி காணாக் கண்டனி னுருவினில்
குஞ்சித சங்கரனே!
வடிவுடை சாந்தம் சங்கடம் போக்கிடும்
சசிசேகர குருநீயே!
(1)

படர்தரு இருளில் பரிதியு மாகியெம்
பழவினை போக்கிடுவாய்!
சுடர்தரு அமுதே சுந்தர வடிவே
சுகமுடன் வாழ்வருள்வாய்!
(2)

ஜதிதனி லேத்தும் பத்தியிற் பாடும்
துதியிதை ஏற்றருள்வாய்!
மதிமுக மங்கள மஞ்சுள வரதா
மதிதனை தந்திடுவாய்!
(3)

வருவினை கடந்து குருவுனைக் கண்டிட
வரமதும் அருளிடுவாய்!
அருளதன் பயனால் குலமதும் ஓங்கிட
திருவருள் புரிந்திடுவாய்!
(4)

அருதிரு மருகா திருமகள் புதல்வா
சன்னதி நாடிடுவோம்!
குருவவுன தருளால் குவலயம் செழிக்க
குருப்புகழ் பாடிடுவோம்!
(5)

குருபர னுந்தன் திருவடி சரணம்
பவபயம் அகற்றிடுமே!
திருவடி நிழலும் தினப்படி தொழவும்
குருவருள் வேண்டினமே!
(6)

செகமிது விளங்க செகத்குரு நின்துணை
நித்தமும் வேண்டுகிறோம்!
செகவுற வெல்லாம் விளங்கிட வேண்டி
துதியிதைப் பாடுகிறோம்!
(7)

சந்திர மௌளி திரிபுர சுந்தரி
கருணையின் ஓருருவாய்
சந்திர சேகர குருபர னேயெமைக்
காத்தருள் புரிந்திடுவாய்!
(8)

ஹரஹர சங்கர ஜயஜய சங்கர
காஞ்சி மடேச்வர பாலயமாம்
குருபதி சுந்தர குருசசி சேகர
வாஞ்சித தாயக ரக்ஷமாம்


No comments:

Post a Comment