சங்கரன் நாமமும் சொல்கையிலே - எங்கள்
சங்கடம் நீங்குது உண்மையிலே
சொந்தங்கள் யாவரும் கூடுகையில் - எந்தன்
நெஞ்சமும் பாடுது பக்தியிலே
சங்கரன்... சசி சேகரன்...
சந்த்ர சேகரன் நாமமும் சொல்கையிலே!
தங்க ரதம் அதை காண்கையிலே....
காஞ்சி தங்கரதமதைக் காண்கையிலே - எங்கள்
நெஞ்சமும் ஏங்குது பக்தியிலே
சொக்கத் தங்கமுந்தன் கருணையிலே எங்கள்
வாழ்வும் மிளிருது மகிழ்வினிலே
சங்கரன்... சசி சேகரன்...
சந்த்ர சேகரன் நாமமும் சொல்கையிலே!
சொந்தங்கள் யாவரும் கூடுகையில் - எந்தன்
நெஞ்சமும் பாடுது பக்தியிலே
பூப்பந்தலும் கூட தோரணமும் - உந்தன்
மகிமை விளங்கிட ஆடிடுதே
சங்கரன்... சசி சேகரன்...
சந்த்ர சேகரன் நாமமும் சொல்கையிலே!
பாரதம் முழுவதும் நடைநடந்த - உந்தன்
பாதங்கள் கண்டிட ஏங்கிடுதே
பாதக் கமலத்தின் நிழலதிலே - மனம்
மையம் கொண்டிடவும் ஏங்கிடுதே
சங்கரன்... சசி சேகரன்...
சந்த்ரசேகரன் நாமமும் சொல்கையிலே!
மெத்தகு வாழ்விதும் உயர்ந்திடுமே - உந்தன்
சந்ததம் நினைவினில் தங்கிடவே
தரும நியாயங்கள் போற்றிடவே - எங்கள்
வாழ்வினில் உயர்வதும் கூடிடுதே
சங்கரன்... சசி சேகரன்...
சந்த்ரசேகரன் நாமமும் சொல்கையிலே!
காஞ்சித் தலமதை நாடிடவே - எங்கள்
வாஞ்சியுன் அருளதை பெற்றிடவே
சாந்தஸ்வரூபி உன் தரிசனமும் கண்டு
சாஸ்வத பதவரம் தந்தருள்வாய்!
சங்கரன்... சசி சேகரன்...
சந்த்ரசேகரன் நாமமும் சொல்கையிலே!
சங்கரன் நாமமும் சொல்கையிலே - எங்கள்
சங்கடம் நீங்குது உண்மையிலே
சொந்தங்கள் யாவரும் கூடுகையில் - எந்தன்
நெஞ்சமும் பாடுது பக்தியிலே
சங்கரன்... சசி சேகரன்...
சந்த்ர சேகரன் நாமமும் சொல்கையிலே!
No comments:
Post a Comment