ஓடி வாவா கண்ணா
ஆடி வாவா
ஓங்கார நாதக்குழல் ஊதிக்கொண்டென் அருகில் (ஓடி)
உன் திரு நாமங்கள் ஓதி வந்தேனே ஓயாமல்
உன் பெருமை புகழ்ந்தேனே – உன்னடியார் சேவை
புரிந்தேனே – உனதடி மலரினைப் பணிந்தேனே (ஓடி)
கருணை என் மேல் பொழிவாய் கமலக்கண்ணா
காமகோடி ஸுந்தரனே கார்முகில் வண்ணா
கனக நிற சேலை இடையோனே கான மயில்
தோகையணி முடியோனே (ஓடி)
அன்பர் குலம் காக்கத் துணிந்தவனே
ஆடும் மணி குண்டலங்கள் அணிந்தவனே
அச்யுதனே இங்கு வருவாயோ
அற்புதக் காட்சி எனக்குத் தருவாயோ (ஓடி)
பொன்னடியில் தங்கச் சிலம்போசை
பொன்னரையில் தங்கரணால் கிண் கிணி ஓசை
புன்னகை திருவாயில் குழலோசை
பரிபூரணமாய்த் தந்தருள்வாய் எங்கள் ஆசை (ஓடி)
No comments:
Post a Comment