Tuesday, 23 June 2020

அன்பருக்கு அன்பனே நீ வா வா முருகா

அன்பருக்கு அன்பனே நீ வா வா முருகா
ஆறு படை வீடுடையாய் வா வா முருகா
இன்பமய ஜ்யோதியே நீ வா வா முருகா
ஈசன் உமை பாலகனே வா வா முருகா (2)
உரக நாபன் மருகனே நீ வா வா முருகா
ஊமைக்கருள் புரிந்தவனே வா வா முருகா
எட்டுக்குடி வேலவனே வா வா முருகா
ஏறுமயில் ஏறியே நீ வா வா முருகா (2)
ஐங்கரனுக்கிளையவனே வா வா முருகா
அகில லோக நாயகனே வா வா முருகா
ஓடி வா நீ ஓடி வா நீ வா வா முருகா
ஆடி வா நீ ஆடி வா நீ வா வா முருகா (2)
ஒய்யாரி வள்ளி லோலா வா வா முருகா
ஓங்கார தத்துவமே வா வா முருகா (2)
ஔவைக்குபதேசித்தவா வா வா முருகா
அன்னை உமை பாலகனே வா வா முருகா
ஆடி வா நீ ஆடி வா நீ வா வா முருகா
அம்மையப்பன் பாலகனே வா வா முருகா (2)



No comments:

Post a Comment