கண்ணன் பாடல்கள் கண்ணன் அடியார்
வருவாய் வருவாய் அம்மா..... ராகம்
வருவாய், வருவாய், வருவாய் -- கண்ணா
(வருவாய், வருவாய், வருவாய்.)
உருவாய் அறிவில் ஒளிர்வாய் -- கண்ணா
உயிரின்னமுதாய்ப் பொழிவாய் -- கண்ணா
கருவாய் என்னுள் வளர்வாய் -- கண்ணா
கமலத் திருவோ டிணைவாய் -- கண்ணா (வருவாய்......)
இணைவாய் எனதாவியிலே -- கண்ணா
இதயத் தினிலே யமர்வாய் -- கண்ணா
கணைவா யசுரர் தலைகள் -- சிதறக்
கடையூ ழியிலே படையோ டெழுவாய்!
(வருவாய்......)
எழுவாய் கடல்மீ தினிலே -- எழுமோர்
இரவிக் கிணையா உளமீ தினிலே
தொழுவேன் சிவனாம் நினையே -- கண்ணா,
துணையே, அமரர் தொழும்வா னவனே!
(வருவாய்......)
மகாகவி சுப்பிரமணிய பாரதியார்
வருவாய் வருவாய் அம்மா..... ராகம்
வருவாய், வருவாய், வருவாய் -- கண்ணா
(வருவாய், வருவாய், வருவாய்.)
உருவாய் அறிவில் ஒளிர்வாய் -- கண்ணா
உயிரின்னமுதாய்ப் பொழிவாய் -- கண்ணா
கருவாய் என்னுள் வளர்வாய் -- கண்ணா
கமலத் திருவோ டிணைவாய் -- கண்ணா (வருவாய்......)
இணைவாய் எனதாவியிலே -- கண்ணா
இதயத் தினிலே யமர்வாய் -- கண்ணா
கணைவா யசுரர் தலைகள் -- சிதறக்
கடையூ ழியிலே படையோ டெழுவாய்!
(வருவாய்......)
எழுவாய் கடல்மீ தினிலே -- எழுமோர்
இரவிக் கிணையா உளமீ தினிலே
தொழுவேன் சிவனாம் நினையே -- கண்ணா,
துணையே, அமரர் தொழும்வா னவனே!
(வருவாய்......)
மகாகவி சுப்பிரமணிய பாரதியார்
No comments:
Post a Comment