Tuesday, 24 November 2020

ஜோதிஜோதி

 ஜோதி ஜோதி ஜோதியனின் ஜோதி பாருங்கள் - உங்கள்

சோதனைகள் தீருமென்று நம்பிப் பாருங்கள் - குருவின்

போதனைகள் கூறும்வண்ணம் வாழ்ந்து பாருங்கள்


(ஜோதி...)


ஆலடியில் அமர்ந்தவனின் அழகைப் பாருங்கள்

ஆலடியில் அமர்ந்தவனின் அழகைப் பாருங்கள்- புவியை

ஆண்டருளும் அழகனவன் ஜோதி பாருங்கள் - சங்கரன்

ஆதிகுரு ரூபம் அதை உணர்ந்து பாருங்கள்


(ஜோதி...)


பூலோக மாந்தர்கள் நம் வாழ்வு விளங்கவே

பூலோக மாந்தர்கள் நம் வாழ்வு விளங்கவே - வேதம்

பெற்றுத் தந்த பரம்பொருளைத் தொழுது பாடுவோம்- காஞ்சி

சங்கரனின் ஜோதி ரூபம் கண்டு வேண்டுவோம்


(ஜோதி...)


வேத வேந்தன் ஞான ஸ்கந்தன் நாமம் போற்றியே

வேத வேந்தன் ஞான ஸ்கந்தன் நாமம் போற்றியே - நான்கு

வேதவழி தர்மநெறி வாழப் பழகுவோம் - வாழ்வில்

வளம்பெறவே தர்மநெறி உணர்ந்து வாழுவோம்


(ஜோதி...)


நடை நடையாய் நடந்தருளும் நளினம் போற்றியே

நடை நடையாய் நடந்தருளும் நளினம் போற்றியே - நாளும்

நடைராசன் சங்கரனின் கழலை நாடுவோம் - குருவை

நெஞ்சகத்தில் போற்றி நாளும் சிறந்து வாழுவோம்


(ஜோதி...)


சின்னஞ்சிறு கிளியே

 சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா செல்வக் களஞ்சியமே

என்னைக் கலி தீர்த்தே உலகில் ஏற்றம் புரிய வந்தாய்


பிள்ளைக் கனியமுதே கண்ணம்மா பேசும் பொற்சித்திரமே

அள்ளி அணைத்திடவே என் முன்னே ஆடி வரும் தேனே


ஓடி வருகையிலே கண்ணம்மா உள்ளம் குளிருதடி

ஆடித் திரிதல் கண்டால் உன்னைப்போய் ஆவி தழுவுதடி


உச்சிதனை முகர்ந்தால் கருவம் ஓங்கி வளருதடி

மெச்சியுனை ஊரார் புகழ்ந்தால் மேனி சிலிர்க்குதடி


கன்னத்தில் முத்தமிட்டால் உள்ளந்தான் கள்வெறி கொள்ளுதடி

உன்னைத் தழுவிடலோ கண்ணம்மா உன்மத்தமாகுதடி


சற்றுன் முகம் சிவந்தால் மனது சஞ்சலமாகுதடி

நெற்றி சுருங்கக் கண்டால் எனக்கு நெஞ்சம் பதைக்குதடி

உன் கண்ணில் நீர் வடிந்தால் என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி

என் கண்ணிற் பாவையன்றோ கண்ணம்மா என்னுயிர் நின்னதன்றோ


சொல்லு மழலையிலே கண்ணம்மா துன்பங்கள் தீர்த்திடுவாய்

முல்லைச் சிரிப்பாலே எனது மூர்க்கம் தவிர்த்திடுவாய்


இன்பக் கதைகளெல்லம் உன்னைப்போல் ஏடுகள் சொல்வதுண்டோ

அன்பு தருவதிலே உன்னை நேர் ஆகுமோர் தெய்வம் உண்டோ


மார்பில் அணிவதற்கே உன்னைப்போல் வைர மணிகளுண்டோ

சீர்பெற்று வாழ்வதற்கே உன்னைப்போல் செல்வம் பிரிதுமுண்டோ


Monday, 9 November 2020

மகாபெரியவாAnthem

 ஜனகனமன மெட்டு

ஜய ஜய சங்கர காஞ்சிய மா'தவ

சசிசே கரகுரு நாதா!

செந்தாள் பணிந்து வேண்டுவ ரெவர்க்கும்

சிறப்புற வாழ்ந்திட வரம் தா!

விந்திய ஹிமாசல கங்காதாரா!

கருணா சாந்தஸ்வ ரூபா!

குருபர காஞ்சிய நேயா!

குவலயம் காத்தருள் தேவா!

தவ முனி வரர் பணி தீரா!

ஹர ஹர சந்திர சேகர குருவே

பதம் பணிந்தோம் எமை கா! வா!

நிதமே... ஜயமே... சிவமே...

சந்திர சேகர வரமே!


Sunday, 28 June 2020

ஹர ஹர சங்கர... ஜய ஜய சங்கர.

ஹரஹர சங்கர ஜயஜய சங்கர
காஞ்சி மடேச்வர பாலயமாம்
குருபதி சுந்தர குருசசி சேகர
வாஞ்சித தாயக ரக்ஷமாம்

அடிமுடி காணாக் கண்டனி னுருவினில்
குஞ்சித சங்கரனே!
வடிவுடை சாந்தம் சங்கடம் போக்கிடும்
சசிசேகர குருநீயே!
(1)

படர்தரு இருளில் பரிதியு மாகியெம்
பழவினை போக்கிடுவாய்!
சுடர்தரு அமுதே சுந்தர வடிவே
சுகமுடன் வாழ்வருள்வாய்!
(2)

ஜதிதனி லேத்தும் பத்தியிற் பாடும்
துதியிதை ஏற்றருள்வாய்!
மதிமுக மங்கள மஞ்சுள வரதா
மதிதனை தந்திடுவாய்!
(3)

வருவினை கடந்து குருவுனைக் கண்டிட
வரமதும் அருளிடுவாய்!
அருளதன் பயனால் குலமதும் ஓங்கிட
திருவருள் புரிந்திடுவாய்!
(4)

அருதிரு மருகா திருமகள் புதல்வா
சன்னதி நாடிடுவோம்!
குருவவுன தருளால் குவலயம் செழிக்க
குருப்புகழ் பாடிடுவோம்!
(5)

குருபர னுந்தன் திருவடி சரணம்
பவபயம் அகற்றிடுமே!
திருவடி நிழலும் தினப்படி தொழவும்
குருவருள் வேண்டினமே!
(6)

செகமிது விளங்க செகத்குரு நின்துணை
நித்தமும் வேண்டுகிறோம்!
செகவுற வெல்லாம் விளங்கிட வேண்டி
துதியிதைப் பாடுகிறோம்!
(7)

சந்திர மௌளி திரிபுர சுந்தரி
கருணையின் ஓருருவாய்
சந்திர சேகர குருபர னேயெமைக்
காத்தருள் புரிந்திடுவாய்!
(8)

ஹரஹர சங்கர ஜயஜய சங்கர
காஞ்சி மடேச்வர பாலயமாம்
குருபதி சுந்தர குருசசி சேகர
வாஞ்சித தாயக ரக்ஷமாம்




#ஸ்ரீகுருகானம்
#நாமநாதம்

சம்போ சங்கர கௌரீசா
சாம்ப சதாசிவ பரமேசா
சற்குரு சங்கர சர்வக்ஞா
சரணம் சரணம் குருநாதா

ஜய ஜய சங்கர தயாபரா
ஜய குரு நாதா க்ருபாகரா

காஞ்சீ சங்கர சதாசிவா
கற்பக வத்ஸல சிவரூபா
வாஞ்சி தாயக பதிநேயா
சரணம் சரணம் குருநாதா

ஜய ஜய சங்கர தயாபரா
ஜய குரு நாதா க்ருபாகரா

சம்பூ சங்கரீ தவரூபா
சங்கட சம்ஹர குருதேவா
ப்ரபு ப்ராணபதி ஜகந்நாதா
சரணம் சரணம் குருநாதா

ஜய ஜய சங்கர தயாபரா
ஜய குரு நாதா க்ருபாகரா

ஆதி மூலமே அவதூதா
அம்பல மேவிடும் மறைநாதா
அனாத ரக்ஷக சதுர்வேதா
சரணம் சரணம் குருநாதா

ஜய ஜய சங்கர தயாபரா
ஜய குரு நாதா க்ருபாகரா

அண்டம் காத்திடும் அதிரூபா
அவனியர் போற்றும் அமுதீசா
சாந்த ஸ்வரூபா ப்ரபோபதே
சரணம் சரணம் குருநாதா

ஜய ஜய சங்கர தயாபரா
ஜய குரு நாதா க்ருபாகரா

ஆரண அரசே வருவீரே
ஆதி சங்கரனே அருள்வீரே
அதிகுண முர்த்தி அவிநாசீ
சரணம் சரணம் குருநாதா

ஜய ஜய சங்கர தயாபரா
ஜய குரு நாதா க்ருபாகரா

மஹா தேவ ஸ்ரீ குருநாதா
மாத்ரு பூதனே மஹாகுணா
மண்டல குலபதி மதிசூடா
சரணம் சரணம் குருநாதா


Tuesday, 23 June 2020

கலியுக வரதன்..

கலியுக வரதன் கண் கண்ட தெய்வமாய்
காட்சியளிப்பது பழனியிலே (கலியுக)

மலைமகள் அருளிய சக்திவேல் முருகன்
மரகத வண்ணனாம் திருமால் மருகன் (கலியுக)

கண்ணுதற் கடவுளின் கண்மணியாய் வந்தார்
கார்த்திகைப் பெண்டிர்கள் அணைப்பில் வளர்ந்தார்
விண்ணவர் குறையெல்லாம் நொடியில் களைந்தார்
வேண்டுவோர் வேண்டுமுன் வரமெல்லாம் தந்தார் ... !!!
(கலியுக)

காமகோடி பீடந்தனில்

ஜய ஜய சங்கரா…. ஹர ஹர சங்கரா….

ஸ்ரீகுருகானம்

(ஆயற்பாடி மாளிகையில் மெட்டில்….)

காமகோடி பீடந்தனில் காஞ்சியிலே சன்னதியில்
சாந்தரூபன் தரிசனமும் கண்டீரோ

காமகோடி பீடந்தனில் காஞ்சியிலே சன்னதியில்
சாந்தரூபன் தரிசனமும் கண்டீரோ
அவர் கருணைமிகு காந்தியினை கண்டவர்க்கு குறையுமில்லை
வாழ்விளங்க தரிசனமும் கண்டீரோ
வாழ்விளங்க தரிசனமும் கண்டீரோ

காமகோடி பீடந்தனில் காஞ்சியிலே சன்னதியில்
சாந்தரூபன் தரிசனமும் கண்டீரோ

ஏலமுத்து மாலையுடன் சந்தனமும் சார்த்திக்கொண்டு
ஆலவாயன் அமர்ந்திருக்கக் கண்டீரோ
ஏலமுத்து மாலையுடன் சந்தனமும் சார்த்திக்கொண்டு
ஆலவாயன் அமர்ந்திருக்கக் கண்டீரோ

அந்த சன்னதியில் கூடியவர் சங்கடங்கள் ஓடிவிடும்
சந்ததமும் ஒளிவிளங்கக் கண்டீரோ
சந்ததமும் ஒளிவிளங்கக் கண்டீரோ


காமகோடி பீடந்
காஞ்சியிலே சன்னதியில்
சாந்தரூபன் தரிசனமும் கண்டீரோ

நாதவொலி கூட்டி அங்கு நான்மறையும் ஓதிடவே
பேதமெல்லாம் மறைவதையும் கண்டீரோ
நாதவொலி கூட்டி அங்கு நான்மறையும் ஓதிடவே
பேதமெல்லாம் மறைவதையும் கண்டீரோ

அவர் மோனநிலை கூட ஒரு யோகநிலை போலிருக்க
காண்பவர்க்கும் அருள்வதையும் கண்டீரோ
காண்பவர்க்கும் அருள்வதையும் கண்டீரோ

காமகோடி பீடந்தனில் காஞ்சியிலே சன்னதியில்
சாந்தரூபன் தரிசனமும் கண்டீரோ

மன்னனவன் வாய்திறந்தால் மண்டலமும் மகிழ்ந்திருக்கும்
மங்களத்தின் மதிவதனம் கண்டீரோ
மன்னனவன் வாய்திறந்தால் மண்டலமும் மகிழ்ந்திருக்கும்
மங்களத்தின் மதிவதனம் கண்டீரோ

அவர் பொன்னழகைக் கண்டவர்க்குள் பேதமெல்லாம் நீங்கிவிடும்
மகிமைதனைச் சன்னதியில் கண்டீரோ
மகிமைதனைச் சன்னதியில் கண்டீரோ

காமகோடி பீடந்தனில் காஞ்சியிலே சன்னதியில்
சாந்தரூபன் தரிசனமும் கண்டீரோ – ஜகத்குரு
சங்கரனின் தரிசனமும் கண்டீரோ!