Saturday, 12 December 2020

என்னகவி.

 




என்ன கவி பாடினாலும் 

எந்தன் மனம் அடங்கவில்லை

ஈடிணை உனக்குமுண்டோ…  சசிசேகரா 

(என்ன கவி பாடினாலும்) 


தன்னையும் அறியவில்லை 

தன்னிலே அறிவுமில்லை 

எந்தையுனை அழைப்பதற்கோ 

என்றுமே மறக்கவில்லை

கந்தை எனை தூய்ப்பையோ 


(என்ன கவி பாடினாலும்) 


அண்டுந்துயர் துடைக்க 

அருகிலினில் யாருமில்லை

அம்பிகையே அழைத்தேன் 

அடியனைக் காப்பதற்கே… 

இக்கணத்தில் நீ அன்றி 

வேறேதும் துணையுமில்லை

இக்கணத்தில் நீ அன்றி 

வேறேதும் துணையுமில்லை 


பிச்சையுண்டோ எனக்கு

உன்னை நான் விடுவதில்லை

சுபிட்சையுண்டோ எனக்கு

உன்னையன்றி வழியுமில்லை 


என்ன கவி பாடினாலும் எந்தன் மனம் அடங்கவில்லை

ஈடிணை உனக்குமுண்டோ…  சசிசேகரா 

(என்ன கவி பாடினாலும்) 


பெரியவா....!


மமபாகம..

 பெரியவா சரணம்.


சரண கமல மதில் 

சரணம் அடையவென

சங்கர சன்னதி செல்வோம்

சங்கர தரிசனம் செய்வோம்


மம தாபம பாகுரு தேவ

மம பாபம பாகுரு தேவ


கருணை கமழும் விழி 

கவலைக் களையும் இனி

மனது மகிழவரம் அருள்வார்

மனதும் இனிக்க அவர் நிறைவார்


மம தாபம பாகுரு தேவ

மம பாபம பாகுரு தேவ


வலது கரம் உயர்த்தி

வனிதை அருள் பொழிந்து

வேதனை நீக்கி அருள்வார்

வாழ்வினை காத்திடச் செய்வார்


மம தாபம பாகுரு தேவ

மம பாபம பாகுரு தேவ


காஞ்சீ பீடம் தனில்

காணும் யோகம் என

கண்டிட தரிசனம் தருவார்

காத்திட குருவென திகழ்வார்


மம தாபம பாகுரு தேவ

மம பாபம பாகுரு தேவ


இனிமை நிறையும் விதம்

இனிக்க உரைத்து நலம்

எங்கிலும் பரவிடச் செய்வார்

என்கிலும் உறைந்து அருள்வார்


மம தாபம பாகுரு தேவ

மம பாபம பாகுரு தேவ


தரும நெறி வழியில்

வாழும் வாழ் விதனில்

வளங்களும் கூடிடச் செய்வார்

வரங்களை கூட்டி அருள்வார்


மம தாபம பாகுரு தேவ

மம பாபம பாகுரு தேவ


ஆரத்தி

 ஜய ஜய ஜய ஜயமே - சங்கர

ஷண்மத ஸ்தாபகனே

ஜய ஜகதீஸ்வர கௌரி க்ருபாகர

ஜய ஜகதீஸ்வர கௌரி க்ருபாகர

சங்கர தேசிகமே - குரு ஸ்ரீ

சந்திர சேகரமே!


மஞ்சுள ரூபக மங்கள தாயக 

சுந்தர ரூபசுதே - ஸ்வாமி

சுந்தர ரூபசுதே!

மனமோகன சிவ விஷ்ணு ஸ்வரூபக

சங்கர தேசிகமே - குரு ஸ்ரீ

சந்திர சேகரமே!


விந்த்ய விலாஸன மதிநதி ஹாரண

சங்கர தேசிகமே - ஸ்வாமி

சந்த்ர மௌளீஸ்வரமே!

சங்கர பூஜித சந்தத போஷித 

சங்கட பவ ஹரனே - குரு ஸ்ரீ

சந்திர சேகரமே!


ஜய ஜய சங்கர ஹே சசி சேகர

சங்கர குருபரனே- ஸ்வாமி

சர்வக்ஞ தேசிகமே

காஞ்சி மடேஸ்வர குருபர சங்கர

சந்திர சேகரமே - குரு ஸ்ரீ

சந்திர சேகரமே!


ஜய ஜய ஜய ஜயமே - சங்கர

ஷண்மத ஸ்தாபகனே

ஜய ஜகதீஸ்வர கௌரி க்ருபாகர

ஜய ஜகதீஸ்வர கௌரி க்ருபாகர

சங்கர தேசிகமே - குரு ஸ்ரீ

சந்திர சேகரமே!

காஞ்சீபுரத்துக்கு வாருங்கள்..

 



காஞ்சீ புரத்துக்கு வாருங்கள்

குரு கருணா மூர்த்தியைப் பாருங்கள்

காஞ்சீ புரத்துக்கு வாருங்கள்

குரு கருணா மூர்த்தியைப் பாருங்கள்


உலகோர் யார்க்கும் உறவாய் நாளும்

உட்கார்ந்திருப்பதைக் காணுங்கள்

உலகோர் யார்க்கும் உறவாய் நாளும்

உட்கார்ந்திருப்பதைக் காணுங்கள்


காஞ்சீ புரத்துக்கு வாருங்கள்

குரு கருணா மூர்த்தியைப் பாருங்கள்


கந்தனின் பேரில் பிறந்தாலும்

அவர் காமாக்ஷீ அருள் வரமாகும்

கந்தனின் பேரில் பிறந்தாலும்

அவர் காமாக்ஷீ அருள் வரமாகும்


கலியுக தெய்வம் அவரே என்பதை

கருத்தினில் கொண்டால் ஆனந்தம்

கலியுக தெய்வம் அவரே என்பதை

கருத்தினில் கொண்டால் ஆனந்தம்


காஞ்சீ புரத்துக்கு வாருங்கள்

குரு கருணா மூர்த்தியைப் பாருங்கள்


சந்ததி வளம்பெற துதி பாடி அவர்

சன்னதி வருவார் அருள்தேடி

சந்ததி வளம்பெற துதி பாடி அவர்

சன்னதி வருவார் அருள்தேடி


குரு சங்கர குரு சங்கர ஜய ஜய

குரு சங்கர குரு சங்கர

சசி சேகர சசி சேகர  குரு குரு

சசி சேகரா


சந்ததி வளம்பெற துதி பாடி அவர்

சன்னதி வருவார் அருள்தேடி

சந்ததி வளம்பெற துதி பாடி அவர்

சன்னதி வருவார் அருள்தேடி


மங்களச் செவ்வருள் வாகை கூட்டும்

பக்தரும் உணர்வார் நிறைவோடு


காஞ்சீ புரத்துக்கு வாருங்கள்

குரு கருணா மூர்த்தியைப் பாருங்கள்


உச்சிக்காலத்தில் சிருங்காரம் அவன்

அவன் ஒவ்வொரு அழகுக்கும் அலங்காரம்

உச்சிக்காலத்தில் சிருங்காரம் அவன்

அவன் ஒவ்வொரு அழகுக்கும் அலங்காரம்


ஸ்ரீஜகத் குருவைப் பார்க்கும் போதே

பக்தரின் மனதுள் ரீங்காரம்

ஸ்ரீஜகத் குருவைப் பார்க்கும் போதே

பக்தரின் மனதுள் ரீங்காரம்


குரு சங்கர குரு சங்கர ஜய ஜய

குரு சங்கர குரு சங்கர

சசி சேகர சசி சேகர  குரு குரு

சசி சேகரா


காஞ்சீ புரத்துக்கு வாருங்கள்

குரு கருணா மூர்த்தியைப் பாருங்கள்


மாலை நேரத்தில் ஸ்ரீதேவி

போல் மங்களம் நிறைப்பார் அகம் மேவி

மாலை நேரத்தில் ஸ்ரீதேவி

போல் மங்களம் நிறைப்பார் அகம் மேவி


சேய்தனை காக்க தாயவள் கனிவுடன்

நித்தமும் காப்பார் புவி மேவி

சேய்தனை காக்க தாயவள் கனிவுடன்

நித்தமும் காப்பார் புவி மேவி


குரு சங்கர குரு சங்கர ஜய ஜய

குரு சங்கர குரு சங்கர

சசி சேகர சசி சேகர  குரு குரு

சசி சேகரா


சூத்திரதாரி சங்கரனுக்கு

ராத்திரி பூஜை ஜகஜோதி

சாத்திரத் தூமணி தாளடி நிழலில்

பக்தியில் சேர்வதும் உயர் நீதி


காஞ்சீ புரத்துக்கு வாருங்கள்

குரு கருணா மூர்த்தியைப் பாருங்கள்

உலகோர் யார்க்கும் உறவாய் நாளும்

உட்கார்ந்திருப்பதைக் காணுங்கள்


காஞ்சீ புரத்துக்கு வாருங்கள்

குரு கருணா மூர்த்தியைப் பாருங்கள்


குரு சங்கர குரு சங்கர ஜய ஜய

குரு சங்கர குரு சங்கர

சசி சேகர சசி சேகர  குரு குரு

சசி சேகரா


Friday, 11 December 2020

அலைபாயுதே..ராகம்

  அலைபாயுதே ராகம்...

நிறைவானதே மன்னா என் மனம் மிக நிறைவானதே - உன் ஆனந்த கோமள தரிசனம் கண்டு (நிறைவானதே…) 

வினை தொடராது கலை யாகவே வாழ்வில் மேகத் தூறல்தனில் ஆடிடும் கொடியின் ஆனந்த நிறைவு போலவே என் மனம் (நிறைவானதே…) 

தெளிந்த மனதில் உந்தன் உருவும் நிறையுதே – என் சித்தம் போக்கில் உந்தன் வாக்கும் ஒளிருதே இனிக்க உன் நாம கானம் காற்றில் வருகுதே நெஞ்சம் குளிர்ந்து உந்தன் நினைவால் உருகுதே ##

இனிக்க மனத்தில் இருத்தி பதித்த மணக்கும் தருமம் அளித்தவா – 

உளம் களிக்கும் விதத்தில் எடுத்து எமக்கு உரைத்து மனத்தில் நிறைத்தவா 

மாந்தரும் யாவரும் உறவென ஒருகுலம் எனும் பதம் அளித்தவா 

பிறவி பெருங்கடலில் வாழ்வு காக்க வா 

இடரிடாதபடி வாழ்வு சிறக்க வா 

எது சுகமோ எது நிறைவோ அது எமக்கும் உண்டோ 

 குரு அருள்தனில் கலியில் உலகமும் மகிழ பத நிழல் வரமும் கிடைத்து இனித்திட (நிறைவானதே…) 


Tuesday, 24 November 2020

ஜோதிஜோதி

 ஜோதி ஜோதி ஜோதியனின் ஜோதி பாருங்கள் - உங்கள்

சோதனைகள் தீருமென்று நம்பிப் பாருங்கள் - குருவின்

போதனைகள் கூறும்வண்ணம் வாழ்ந்து பாருங்கள்


(ஜோதி...)


ஆலடியில் அமர்ந்தவனின் அழகைப் பாருங்கள்

ஆலடியில் அமர்ந்தவனின் அழகைப் பாருங்கள்- புவியை

ஆண்டருளும் அழகனவன் ஜோதி பாருங்கள் - சங்கரன்

ஆதிகுரு ரூபம் அதை உணர்ந்து பாருங்கள்


(ஜோதி...)


பூலோக மாந்தர்கள் நம் வாழ்வு விளங்கவே

பூலோக மாந்தர்கள் நம் வாழ்வு விளங்கவே - வேதம்

பெற்றுத் தந்த பரம்பொருளைத் தொழுது பாடுவோம்- காஞ்சி

சங்கரனின் ஜோதி ரூபம் கண்டு வேண்டுவோம்


(ஜோதி...)


வேத வேந்தன் ஞான ஸ்கந்தன் நாமம் போற்றியே

வேத வேந்தன் ஞான ஸ்கந்தன் நாமம் போற்றியே - நான்கு

வேதவழி தர்மநெறி வாழப் பழகுவோம் - வாழ்வில்

வளம்பெறவே தர்மநெறி உணர்ந்து வாழுவோம்


(ஜோதி...)


நடை நடையாய் நடந்தருளும் நளினம் போற்றியே

நடை நடையாய் நடந்தருளும் நளினம் போற்றியே - நாளும்

நடைராசன் சங்கரனின் கழலை நாடுவோம் - குருவை

நெஞ்சகத்தில் போற்றி நாளும் சிறந்து வாழுவோம்


(ஜோதி...)


சின்னஞ்சிறு கிளியே

 சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா செல்வக் களஞ்சியமே

என்னைக் கலி தீர்த்தே உலகில் ஏற்றம் புரிய வந்தாய்


பிள்ளைக் கனியமுதே கண்ணம்மா பேசும் பொற்சித்திரமே

அள்ளி அணைத்திடவே என் முன்னே ஆடி வரும் தேனே


ஓடி வருகையிலே கண்ணம்மா உள்ளம் குளிருதடி

ஆடித் திரிதல் கண்டால் உன்னைப்போய் ஆவி தழுவுதடி


உச்சிதனை முகர்ந்தால் கருவம் ஓங்கி வளருதடி

மெச்சியுனை ஊரார் புகழ்ந்தால் மேனி சிலிர்க்குதடி


கன்னத்தில் முத்தமிட்டால் உள்ளந்தான் கள்வெறி கொள்ளுதடி

உன்னைத் தழுவிடலோ கண்ணம்மா உன்மத்தமாகுதடி


சற்றுன் முகம் சிவந்தால் மனது சஞ்சலமாகுதடி

நெற்றி சுருங்கக் கண்டால் எனக்கு நெஞ்சம் பதைக்குதடி

உன் கண்ணில் நீர் வடிந்தால் என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி

என் கண்ணிற் பாவையன்றோ கண்ணம்மா என்னுயிர் நின்னதன்றோ


சொல்லு மழலையிலே கண்ணம்மா துன்பங்கள் தீர்த்திடுவாய்

முல்லைச் சிரிப்பாலே எனது மூர்க்கம் தவிர்த்திடுவாய்


இன்பக் கதைகளெல்லம் உன்னைப்போல் ஏடுகள் சொல்வதுண்டோ

அன்பு தருவதிலே உன்னை நேர் ஆகுமோர் தெய்வம் உண்டோ


மார்பில் அணிவதற்கே உன்னைப்போல் வைர மணிகளுண்டோ

சீர்பெற்று வாழ்வதற்கே உன்னைப்போல் செல்வம் பிரிதுமுண்டோ