Tuesday, 12 January 2021

ஆண்டாள் பாட்டு


ராகம்.ஹம்ஸத்வனி


தாளம்: ஆதி

பல்லவி

வரம் தருவாய் ஸ்ரீவரமங்கையே என் வாழ்வெல்லாம் உன்னையே வாழ்த்தி வணங்கிடவே (வரம்)

அனுபல்லவி

றந்தும் நான் தீவினை கறைபடாதிருக்கவும்

(உன்) மலர்பதம் தொழுதேமகிழ்ச்சியில் திளைக்கவும் (வரம்)

சரணம்

திருமலையில் நீ அலர்மேல் மங்கையாக

திருத்தங்காலில் நீ செங்கமலத்தாயாராக (இரண்டு வரிகளும் இரண்டு முறை)

னதிஒருவில்லிபுத்தூரில் நீ ஆண்டாளக

திருவரங்கத்தில் நீ ரெங்க நாயகியாக (வரம்)

மாடு மேய்க்கும் கண்ணே நீ

 

யசோதை:
மாடு மேய்க்கும் கண்ணே நீ
போக வேண்டாம் சொன்னேன்

அனுபல்லவி:

கண்ணன்:
போக வேணும் தாயே
தடை சொல்லாதே நீயே

சரணம்:

காய்ச்சின பாலு தரேன்கல்கண்டுச் சீனி தரேன்
கை நிறைய வெண்ணைய் தரேன்;வெய்யிலிலே போக வேண்டாம்
(மாடு மேய்க்கும் கண்ணே - நீ போகவேண்டாம் சொன்னேன்) 

காய்ச்சின பாலும் வேண்டாம்;கல்கண்டுச் சீனி வேண்டாம்
உல்லாசமாய் மாடு மேய்த்துஒரு நொடியில் திரும்பிடுவேன்
(போக வேணும் தாயே - தடை சொல்லாதே நீயே) 
----------------------------------------------------------------------------

யமுனா நதிக் கரையில் எப்பொழுதும் கள்வர் பயம்
கள்வர் வந்து உனை அடித்தால் கலங்கிடுவாய் கண்மணியே 
(மாடு மேய்க்கும் கண்ணே - நீ போகவேண்டாம் சொன்னேன்) 

கள்ளனுக்கோர் கள்ளன் உண்டோ?கண்டதுண்டோ சொல்லும் அம்மா?
கள்வர் வந்து எனை அடித்தால் கண்ட துண்டம் செய்திடுவேன் 
(போக வேணும் தாயே - தடை சொல்லாதே நீயே) 
----------------------------------------------------------------------------

கோவர்த்தன கிரியில் கோரமான மிருகங்கள் உண்டு
கரடி புலியைக் கண்டால் கலங்கிடுவாய் கண்மணியே 
(மாடு மேய்க்கும் கண்ணே - நீ போகவேண்டாம் சொன்னேன்) 

காட்டு மிருகமெல்லாம் என்னைக் கண்டால் ஓடி வரும்
கூட்டங் கூட்டமாக வந்தால் வேட்டை ஆடி ஜெயித்திடுவேன்
(போக வேணும் தாயே - தடை சொல்லாதே நீயே) 
----------------------------------------------------------------------------

பாசமுள்ள நந்தகோபர் பாலன் எங்கே என்று கேட்டால்
என்ன பதில் சொல்வேனடா என்னுடைய கண்மணியே 
(மாடு மேய்க்கும் கண்ணே - நீ போகவேண்டாம் சொன்னேன்) 

பாலருடன் வீதியிலே பந்தாடுறான் என்று சொல்லேன்
தேடி என்னை வருகையிலே ஓடி வந்து நின்றிடுவேன் 
(போக வேணும் தாயே - தடை சொல்லாதே நீயே)

Sunday, 10 January 2021

முத்தைத்தரு ராகம்

 முத்தைத்தரு ராகம்..

சித்தித்தருட் பித்தப் பரமனும் 

        பத்தித்தரும் முத்தித் திருமறை 

                புந்தித்தரு சந்தத் திருவருட் ......         குருநாதா 


நந்திக்கொடி கொண்டப் பெருமிறை 

        தந்தத்திரு வேதப் பெருமறை 

                உந்தத்தகு பத்தித் தொழுதிட....         யுனைநாடி 


கச்சித்தல புந்தித் திருவருள் 

        மெச்சித்தரு சந்தத் தொலியொடு 

                சத்தித்தரு மெத்தக் குருபர ....          எனவோதி 


குட்டத்திரு பத்தித் தெளிவதும் 

        முட்டித்தரு மெத்தத் திருவொளி 

                கச்சித்தல முத்தித் திருவடி ..        யுனதாலே 


பட்டப்பெரு துட்டப் பிணியது 

        விட்டத்தெழு முட்டக் கதியது 

                விட்டுத்திட மெட்டிப் பிடியதும் .....எனதாக 


திக்குத்திசை யெக்கிப் படர்உரு 

        முக்கட்சடை சித்தப் புகலென 

                முத்தித்துவக் குற்றுத் தவநெறி ...        யுடையீசா 


முட்டுப்பட மெட்டுத் தீயதுந் 

        தட்டுபடு மட்டப் பெருவெளி 

                கட்டுத்தறி யாதுங் களைந்திட  ..... வுனைநாடி 


தித்தித்தகு துத்திச் சுவைபட 

        சத்தித்தரு சித்தத் திருவென 

                முத்தித்தரு பத்திச் சங்கர ...... பெருமானே! 



Saturday, 12 December 2020

என்னகவி.

 




என்ன கவி பாடினாலும் 

எந்தன் மனம் அடங்கவில்லை

ஈடிணை உனக்குமுண்டோ…  சசிசேகரா 

(என்ன கவி பாடினாலும்) 


தன்னையும் அறியவில்லை 

தன்னிலே அறிவுமில்லை 

எந்தையுனை அழைப்பதற்கோ 

என்றுமே மறக்கவில்லை

கந்தை எனை தூய்ப்பையோ 


(என்ன கவி பாடினாலும்) 


அண்டுந்துயர் துடைக்க 

அருகிலினில் யாருமில்லை

அம்பிகையே அழைத்தேன் 

அடியனைக் காப்பதற்கே… 

இக்கணத்தில் நீ அன்றி 

வேறேதும் துணையுமில்லை

இக்கணத்தில் நீ அன்றி 

வேறேதும் துணையுமில்லை 


பிச்சையுண்டோ எனக்கு

உன்னை நான் விடுவதில்லை

சுபிட்சையுண்டோ எனக்கு

உன்னையன்றி வழியுமில்லை 


என்ன கவி பாடினாலும் எந்தன் மனம் அடங்கவில்லை

ஈடிணை உனக்குமுண்டோ…  சசிசேகரா 

(என்ன கவி பாடினாலும்) 


பெரியவா....!


மமபாகம..

 பெரியவா சரணம்.


சரண கமல மதில் 

சரணம் அடையவென

சங்கர சன்னதி செல்வோம்

சங்கர தரிசனம் செய்வோம்


மம தாபம பாகுரு தேவ

மம பாபம பாகுரு தேவ


கருணை கமழும் விழி 

கவலைக் களையும் இனி

மனது மகிழவரம் அருள்வார்

மனதும் இனிக்க அவர் நிறைவார்


மம தாபம பாகுரு தேவ

மம பாபம பாகுரு தேவ


வலது கரம் உயர்த்தி

வனிதை அருள் பொழிந்து

வேதனை நீக்கி அருள்வார்

வாழ்வினை காத்திடச் செய்வார்


மம தாபம பாகுரு தேவ

மம பாபம பாகுரு தேவ


காஞ்சீ பீடம் தனில்

காணும் யோகம் என

கண்டிட தரிசனம் தருவார்

காத்திட குருவென திகழ்வார்


மம தாபம பாகுரு தேவ

மம பாபம பாகுரு தேவ


இனிமை நிறையும் விதம்

இனிக்க உரைத்து நலம்

எங்கிலும் பரவிடச் செய்வார்

என்கிலும் உறைந்து அருள்வார்


மம தாபம பாகுரு தேவ

மம பாபம பாகுரு தேவ


தரும நெறி வழியில்

வாழும் வாழ் விதனில்

வளங்களும் கூடிடச் செய்வார்

வரங்களை கூட்டி அருள்வார்


மம தாபம பாகுரு தேவ

மம பாபம பாகுரு தேவ


ஆரத்தி

 ஜய ஜய ஜய ஜயமே - சங்கர

ஷண்மத ஸ்தாபகனே

ஜய ஜகதீஸ்வர கௌரி க்ருபாகர

ஜய ஜகதீஸ்வர கௌரி க்ருபாகர

சங்கர தேசிகமே - குரு ஸ்ரீ

சந்திர சேகரமே!


மஞ்சுள ரூபக மங்கள தாயக 

சுந்தர ரூபசுதே - ஸ்வாமி

சுந்தர ரூபசுதே!

மனமோகன சிவ விஷ்ணு ஸ்வரூபக

சங்கர தேசிகமே - குரு ஸ்ரீ

சந்திர சேகரமே!


விந்த்ய விலாஸன மதிநதி ஹாரண

சங்கர தேசிகமே - ஸ்வாமி

சந்த்ர மௌளீஸ்வரமே!

சங்கர பூஜித சந்தத போஷித 

சங்கட பவ ஹரனே - குரு ஸ்ரீ

சந்திர சேகரமே!


ஜய ஜய சங்கர ஹே சசி சேகர

சங்கர குருபரனே- ஸ்வாமி

சர்வக்ஞ தேசிகமே

காஞ்சி மடேஸ்வர குருபர சங்கர

சந்திர சேகரமே - குரு ஸ்ரீ

சந்திர சேகரமே!


ஜய ஜய ஜய ஜயமே - சங்கர

ஷண்மத ஸ்தாபகனே

ஜய ஜகதீஸ்வர கௌரி க்ருபாகர

ஜய ஜகதீஸ்வர கௌரி க்ருபாகர

சங்கர தேசிகமே - குரு ஸ்ரீ

சந்திர சேகரமே!

காஞ்சீபுரத்துக்கு வாருங்கள்..

 



காஞ்சீ புரத்துக்கு வாருங்கள்

குரு கருணா மூர்த்தியைப் பாருங்கள்

காஞ்சீ புரத்துக்கு வாருங்கள்

குரு கருணா மூர்த்தியைப் பாருங்கள்


உலகோர் யார்க்கும் உறவாய் நாளும்

உட்கார்ந்திருப்பதைக் காணுங்கள்

உலகோர் யார்க்கும் உறவாய் நாளும்

உட்கார்ந்திருப்பதைக் காணுங்கள்


காஞ்சீ புரத்துக்கு வாருங்கள்

குரு கருணா மூர்த்தியைப் பாருங்கள்


கந்தனின் பேரில் பிறந்தாலும்

அவர் காமாக்ஷீ அருள் வரமாகும்

கந்தனின் பேரில் பிறந்தாலும்

அவர் காமாக்ஷீ அருள் வரமாகும்


கலியுக தெய்வம் அவரே என்பதை

கருத்தினில் கொண்டால் ஆனந்தம்

கலியுக தெய்வம் அவரே என்பதை

கருத்தினில் கொண்டால் ஆனந்தம்


காஞ்சீ புரத்துக்கு வாருங்கள்

குரு கருணா மூர்த்தியைப் பாருங்கள்


சந்ததி வளம்பெற துதி பாடி அவர்

சன்னதி வருவார் அருள்தேடி

சந்ததி வளம்பெற துதி பாடி அவர்

சன்னதி வருவார் அருள்தேடி


குரு சங்கர குரு சங்கர ஜய ஜய

குரு சங்கர குரு சங்கர

சசி சேகர சசி சேகர  குரு குரு

சசி சேகரா


சந்ததி வளம்பெற துதி பாடி அவர்

சன்னதி வருவார் அருள்தேடி

சந்ததி வளம்பெற துதி பாடி அவர்

சன்னதி வருவார் அருள்தேடி


மங்களச் செவ்வருள் வாகை கூட்டும்

பக்தரும் உணர்வார் நிறைவோடு


காஞ்சீ புரத்துக்கு வாருங்கள்

குரு கருணா மூர்த்தியைப் பாருங்கள்


உச்சிக்காலத்தில் சிருங்காரம் அவன்

அவன் ஒவ்வொரு அழகுக்கும் அலங்காரம்

உச்சிக்காலத்தில் சிருங்காரம் அவன்

அவன் ஒவ்வொரு அழகுக்கும் அலங்காரம்


ஸ்ரீஜகத் குருவைப் பார்க்கும் போதே

பக்தரின் மனதுள் ரீங்காரம்

ஸ்ரீஜகத் குருவைப் பார்க்கும் போதே

பக்தரின் மனதுள் ரீங்காரம்


குரு சங்கர குரு சங்கர ஜய ஜய

குரு சங்கர குரு சங்கர

சசி சேகர சசி சேகர  குரு குரு

சசி சேகரா


காஞ்சீ புரத்துக்கு வாருங்கள்

குரு கருணா மூர்த்தியைப் பாருங்கள்


மாலை நேரத்தில் ஸ்ரீதேவி

போல் மங்களம் நிறைப்பார் அகம் மேவி

மாலை நேரத்தில் ஸ்ரீதேவி

போல் மங்களம் நிறைப்பார் அகம் மேவி


சேய்தனை காக்க தாயவள் கனிவுடன்

நித்தமும் காப்பார் புவி மேவி

சேய்தனை காக்க தாயவள் கனிவுடன்

நித்தமும் காப்பார் புவி மேவி


குரு சங்கர குரு சங்கர ஜய ஜய

குரு சங்கர குரு சங்கர

சசி சேகர சசி சேகர  குரு குரு

சசி சேகரா


சூத்திரதாரி சங்கரனுக்கு

ராத்திரி பூஜை ஜகஜோதி

சாத்திரத் தூமணி தாளடி நிழலில்

பக்தியில் சேர்வதும் உயர் நீதி


காஞ்சீ புரத்துக்கு வாருங்கள்

குரு கருணா மூர்த்தியைப் பாருங்கள்

உலகோர் யார்க்கும் உறவாய் நாளும்

உட்கார்ந்திருப்பதைக் காணுங்கள்


காஞ்சீ புரத்துக்கு வாருங்கள்

குரு கருணா மூர்த்தியைப் பாருங்கள்


குரு சங்கர குரு சங்கர ஜய ஜய

குரு சங்கர குரு சங்கர

சசி சேகர சசி சேகர  குரு குரு

சசி சேகரா