Monday, 1 March 2021

சங்கர கீதம்

 "சந்த்ரசேகரா சந்த்ரசேகரா சந்த்ரசேகரா நமஸ்காரம் 

சந்த்ரசேகரா சந்த்ரசேகரா சந்த்ரசேகரா நமஸ்காரம்" 


சத்திய மிவரைச் சிந்தனை செய்தால் 

சகலமும் நடந்திடும் சடுதியிலே! 

சித்தமுந் தூயுறு பத்தியும் செய்தால் 

சங்கடம் தீர்ந்திடும் வாழ்வினிலே! 

(1) 


"சந்த்ரசேகரா சந்த்ரசேகரா சந்த்ரசேகரா நமஸ்காரம் 

சந்த்ரசேகரா சந்த்ரசேகரா சந்த்ரசேகரா நமஸ்காரம்" 


அம்பர மாடிடும் ஆடவல் லானருள் 

அஞ்சுக மேற்றிடும் வாழ்வினிலே! 

அம்பல மோடியு மஞ்சுகத் தாளதைக் 

கண்டிட மங்களம் ஓங்கிடுமே! 

(2) 


"சந்த்ரசேகரா சந்த்ரசேகரா சந்த்ரசேகரா நமஸ்காரம் 

சந்த்ரசேகரா சந்த்ரசேகரா சந்த்ரசேகரா நமஸ்காரம்" 


மும்மல மாயை மதிகெடு இருளும் 

மன்னவன் வரமும் தீர்த்திடுமே! 

பூதல மாமகன் பொன்னுரு கண்டிட 

பூவுல கெங்கிலும் மகிழ்ந்திடுமே! 

(3) 


"சந்த்ரசேகரா சந்த்ரசேகரா சந்த்ரசேகரா நமஸ்காரம் 

சந்த்ரசேகரா சந்த்ரசேகரா சந்த்ரசேகரா நமஸ்காரம்" 


மா’தவ மானுட தெய்வமு மிங்கே 

ஆறுதல் தந்திட வந்ததுவே! 

ஆதவன் அருளென ஞானமுந் தந்திட 

மா’குரு மந்திரம் போற்றுவமே! 

(4) 


"சந்த்ரசேகரா சந்த்ரசேகரா சந்த்ரசேகரா நமஸ்காரம் 

சந்த்ரசேகரா சந்த்ரசேகரா சந்த்ரசேகரா நமஸ்காரம்" 


சாதியும் பேதமு மேதுமிலா தொரு 

சங்கர சன்னதி நாடுவமே! 

நாதியும் நற்கதி யாகவு மேவிடும் 

சசிசேகர பதம் போற்றுவமே! 

(5) 


"சந்த்ரசேகரா சந்த்ரசேகரா சந்த்ரசேகரா நமஸ்காரம் 

சந்த்ரசேகரா சந்த்ரசேகரா சந்த்ரசேகரா நமஸ்காரம்" 


வாரண மாயிர மொளியரு ளாசியும் 

செகத்குரு சங்கரன் தந்திடவே 

காரண காரியம் யாவிலும் வெற்றியும் 

கூடிட வாழ்வினில் ஓங்குவமே! 

(6) 


"சந்த்ரசேகரா சந்த்ரசேகரா சந்த்ரசேகரா நமஸ்காரம் 

சந்த்ரசேகரா சந்த்ரசேகரா சந்த்ரசேகரா நமஸ்காரம்" 


நானென தின்றி தானது மின்றி 

சாதகம் புரிதல் நன்றாமே! 

நாதனுன் நாமம் நாவினில் பரவிட 

நாயகமே அருள் புரிவாயே! 

(7) 


"சந்த்ரசேகரா சந்த்ரசேகரா சந்த்ரசேகரா நமஸ்காரம் 

சந்த்ரசேகரா சந்த்ரசேகரா சந்த்ரசேகரா நமஸ்காரம்" 


சேயென துள்ளம் தாய்நீ யறிவாய் 

சோர்வதும் நீங்கிட சுகமருள்வாய்! 

பார்திகழ் காஞ்சியின் பேரிறை பரமே 

பவவினை நீங்கிட அருள்வாயே! 

(8) 


"சந்த்ரசேகரா சந்த்ரசேகரா சந்த்ரசேகரா நமஸ்காரம் 

சந்த்ரசேகரா சந்த்ரசேகரா சந்த்ரசேகரா நமஸ்காரம்"

சங்கர கீதம்

 

  மந்திர முதல்வனை மங்கல வுருதனை 

        சத்சிவ புதல்வனை ….. அடிபேணி 


முப்புர மெரித்தவ னற்புத மனையவள் 

        புத்திர  மதியொளி ……. அருள்கூடி 


சித்தமு மொளிபட சிந்தையி லுருவகை 

        செப்பிடு வருட்புகழ் …. இதனூடே 


சித்துரு சிவபுரச் சங்கர கழநிழல் 

        பற்றிட வழகுற ….. மனதார 


இச்செக முறநெறி நற்திற முடனுரை 

        செப்பிய முனிவனின்…. புகழ்பாட 


செப்பிடு குருப்புகழ் சத்திய மொழியதில் 

        நித்தமு மெழுதிட …… வழிதாராய்!


பித்தமுள் ளெம்மனம்  போற்றிடு வகையென 

        சித்தமுஞ் சீர்படு ….. மொளிகூட 


முத்தமிழ் அழகனின் முத்திரை யுடையவ 

        ரொற்றியு மெழுதிட ….. அருள்வாயே!


சங்கர கீதம்

 

என்னென்று சொல்லி யான் புலம்புவேன் - என் ஈசா

ஏகம்பத் தலம் மேவும் எந்தை சசிசேகரா


(என்னென்று...)


சொல்லொனாத் துயர்களும் சோகத்துச் சுமைகளும்

சுகமிலா நிலைதன்னில் சோர்வுகொள் நிலைதனை


(என்னென்று...)


வாடிடும் நெஞ்சத்தில் தளிரருள் புரிந்து நீ

வாஞ்சை யோடண்டிடும் வளர்நிலை பெறுவேனோ


நாடியே நலம்பெற நத்தித் தொழுகின்றேன்

நாதனே ஓடோடி வந்து நீ காப்பாயோ


(என்னென்று....)


நிலையாத பொருளெலாம் நிலையென்று நம்பியே

நெஞ்சமும் தடுமாறும் நிலையதும் போகுமோ


அறமிலா செயலாலே அழிவையும் தேடியே

அலைந்து கெட்டொழிதலும் அகலுமோ இனியுமே


(என்னென்று...)


உருகியே தினம்பாடி உம்மையே போற்றிட

ஊழ்வினை நீக்கி நீ நலவளம் அருள்வையோ

உமையாளின் மறுபாதி உலகாளும் சுபஜோதி

உற்றவன் வேண்டினேன் உவந்தருள் புரிவையோ


(என்னென்று....). 


Wednesday, 24 February 2021

 

மீண்டும் கோலாப்பூருக்கு மாற்றல். நமக்குதான் இந்தி தெரியுமே என்று 'கெத்'தாக இருந்தேன்!💃 அங்கு சென்றதும்தான் புரிந்தது மகாராஷ்டிரமொழி மகா கஷ்டமான மொழி😣 என்று! அங்கு அருகில் இருந்தவர் வீட்டுக்கு கூப்பிட என் பெண்ணையும் உடன் அழைத்து சென்றேன். அவர்கள் வீட்டில் மாமியாரும் மருமகள்களுமாக👵🙎🙍🤷🙆
நாலைந்து பேர். எங்களை அதிசயமாகப்👀 பார்த்தார்கள்!

இந்தியில் பேசுவார்கள் என நினைத்தால் அவர்களோ மராத்தியில் பேச ஆரம்பித்து விட்டார்கள். எங்களை பஸா🙋 என்று சொல்ல...(பஸ்ஸில்🚌 வந்தீர்களா? ) என்று கேட்கிறாளோ? இருவரும் இந்தியில் 'டீக்ஹை' என்று சொல்ல சோபாவைக்🛋️ காட்டி மீண்டும் பஸா என்றதும்தான் புரிந்தது உட்காரச் சொல்கிறாள் என்று! அசட்டு சிரிப்புடன்😬 அமர்ந்தோம்😅! அவர்கள் எங்களுக்கு புரியுமா என்று கூட யோசிக்காமல்😖 சரவெடி💣🧨போல் விடாது பேச🗣️ 'அச்சாஅச்சா' என்று சொல்லி சமாளித்தோம்!😀 அவர்களுக்கு இந்தி
புரியவில்லை. அவர்கள் பேசியதில் சாய் ☕என்பது மட்டும் புரிய அதைக் குடித்துவிட்டு விட்டால் சரி என்று ஓடி 🏃வந்து விட்டோம்!

என் பிள்ளை ஒருநாள் என்னிடம்🤵 'ஆயி மாஜிஆயி மலஜேவன் பாய்ஜே ஆயி' என்றான். அவன் மராட்டி கற்றுக்👩‍💻 கொண்டு விட்டானாம்! நான் எதுவும் புரியாமல்🤔 'என்னடா..ஆயி மலம்னு! என்ன பேசற நீ' என்றதும் 'மராட்டி பேசறேன்.ஆயின்னா அம்மா' என்றான்.👩 'அடப்பாவி..என்னை மாஜி அம்மா ஆக்கிட்டயா? எப்பவும் நான்தாண்டா உன் அம்மா'👩‍👦 என்றேன் நான் டென்ஷனாக😟

'ஐயோ அம்மா.மாஜி ஆயினா என் அம்மானு அர்த்தம்'. 👩‍👦
'அப்பறம் ஏதோ மலம் ஜீவனம்னியே.🙎 மல ஜேவன் பாய்ஜேன்னா எனக்கு சாப்பாடு🍛 வேணும்னு அர்த்தம்' என்றான்.
இக்கட, அக்கட, புடே ,காலி,பாய்ஜே,நக்கோ என்று  எப்படியோ மராட்டியும் கற்றுக் கொண்டேன்!😅

எங்கள் வீட்டுக்கு பக்கத்தில் ஒரு பீகார் தம்பதிகள்👭 குடியிருந்தனர். அவர்களின் 2வயது பெண் குழந்தை எப்பவும் எங்கள் வீட்டில்தான் இருப்பாள். ஒருநாள் நான் அவளைத் தூக்கி வைத்துக் கொண்டு விளையாடியபோது என் குழந்தைகள் சுவரில் ஒட்டி வைத்திருந்த ஷாருக்கான்👤 புகைப்படத்தைக் காண்பித்து 'பாப்பா பாரு' என்று சொல்ல, சரியாக உள்ளே நுழைந்த அவள் அம்மா 'ஆண்ட்டி! க்யா போலா ஆப்னே? ஷாருக்கான்கோ பப்பா போல்தியா(என்ன சொல்கிறீர்கள்? ஷாருக்கான் அவளுக்கு அப்பாவா?)என்று கோபமாகக்😟 கேட்டாள். எனக்கு பிறகுதான் புரிந்தது பாப்பா என்றால் இந்தியில் அப்பா👨‍👧 என்று பொருள். நான் ஏதோ சொல்லப்போக இப்படி அர்த்தம் எடுத்துக் கொண்டு விட்டாளே என்று தோன்றியது🙄

அப்புறம் ஒரு வருடம் பெங்களூர் வாசம்!🌃 ‘அப்பாடி! பெங்களூரில் நிறைய தமிழர்கள் உண்டு. கல்கண்டு தமிழில் கலகலக்கலாம்' என்ற என் ஆசையில் மண்! எங்கள் வீட்டுக்காரம்மாவோ ‘பச்சைக் கன்னடத்தி!’🤦 அவள் வீடு சென்ற என்னை பன்ரி, குத்துக் கொட்றி (‘என்ன மரியாதையில்லாமல் குட்றி என்கிறாளே, என்ன கேட்கிறாள்’) என்று நான் ‘திருதிரு’க்க,😳 நாற்காலியைக் காட்டியதும்தான், சட்டென்று நம் 'சென்னைத் தமிழ்’ குந்திக்க  ஞாபகம் வர அமர்ந்தேன்!😊

'நிம்ம எஜமானரு ஏனு மாடுதாரு?’ (மாடுக்கு எஜமானரா?!) 🐐நிம்ம ஹெஸரு ஏனு?’ (ஏசுவைப் பற்றிக் கேட்கிறாளா!) நீரு சாக்கா பேக்கா?' (கடைசியா என்னை பேக்குன்னுட்டாளே!) 😰என்று ‘சரவெடி’ 💥மாதிரி கேள்விகளைத் தொடுக்க, ஒரு அட்சரம் கூட புரியாமல் #புஸ்வாணமாகி⛲நான் வீடு திரும்பினேன்! பிறகு அவற்றுக்கு அர்த்தம் தெரிந்து கொண்டேன்!

வெளி மாநிலம் சரி, நம் மாவட்டத்துக்குள்ளும் சென்னைத் தமிழ், தஞ்சைத் தமிழ், மதுரைத் தமிழ், நெல்லைத் தமிழ், கோவைத் தமிழ் என்று பேச்சு வழக்கு வித்தியாசமாகத்தானே இருக்கிறது?😌

நாகர்கோவிலில் என் பிறந்த வீட்டுக்குப் போனபோது, என் அம்மாவுக்குத் தெரிந்த மாமி வந்து, 'ஏண்டி வீச்சாரிக்காயோ?🙁 'உடம்பு வண்ணமே வைக்கல்லையே?’😟 என்று கேட்க,😇 நான் அர்த்தம் தெரியாமல் முழிக்க, அம்மாதான் பிறகு விளக்கினார்.அது மலையாளத்தமிழ் என்றும், ‘வீச்சாரிக்காயோ’ என்றால் ‘நன்னா இருக்கியா’ என்று அர்த்தமாம். ‘உடம்பு வண்ணமே வைக்கவில்லையே’ என்றால் ‘உடம்பு பெருக்கவே இல்லையே’ என்று பொருளாம்😆!

அங்கு கணவரை மாப்பிள்ளை என்பார்களாம்🤩என் பிரசவம் அங்குதான். என் அம்மாவிடம் நர்ஸ் 'உங்க மாப்பிள்ளை இன்னிக்கு வரலயா?' எனக் கேட்க, 'என் மாப்பிள்ளை டில்லி பக்கம் இருக்கிறார். இனிதான் குழந்தையைப் பார்க்க வருவார்' என அவளோ'அப்ப நேற்று வந்தது யார்?' என்றதும்தான் அவள் என் அப்பாவைக் கேட்கிறார் எனப் புரிந்ததாம்!😀 கடையில் சர்க்கரை கேட்க வெல்லம் கொடுத்தாராம் கடைக்கார்!. பஞ்சாரை என்றால் சர்க்கரை!😅

ஈரோடில் பெண்களை 👸பிள்ளை என்பார்கள். நான் அங்கு சென்ற புதிதில் என் முதல் பிள்ளை, இரண்டாம் பிள்ளை என்றபோது 'உங்க வீட்டில ஒரு பிள்ளை தான இருக்கா' என்றதும் தான் அங்கு பிள்ளை என்றால் பெண் என்று அர்த்தமே புரிந்தது😉

விளக்கமாற்றுக்குக் கூட,🧹 ‘வார்கோல், சீமாறு, பெருக்குமாறு, துடப்பம்’ என்று ஊருக்கு ஒரு பெயர் இருக்கும்போது மற்ற பேச்சுகளிலும் வித்தியாசம் இருப்பதில் வியப்பில்லையே!?😆

இப்படி மாநிலம்தோறும் சென்றதன் பலன் பல மொழிகளைத் தெரிந்து கொள்ளும் சந்தோஷம் கிடைத்தது உண்மை!😃

ஜயஜயதேவி..துர்காதேவி

 ஜயஜயதேவி..துர்காதேவி

#ஸ்ரீகுருகானம்

ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கர சந்திரசேகர சரணம் 
ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கர ஜகத்குரு சங்கர சரணம்..காஞ்சி ஜகத்குரு சங்கர சரணம்
சங்கர நாமம் செபித்தால் என்றும் 
சங்கடம் களைந்தோடும் 
சந்திர சேகர ஜெகத்குரு அவரை 
தரிசனம் கண்டால் போதும் 
கர்ம வினைகளும் போகும் 
சர்வ மங்களம் கூடும் ( ஜய ஜய ) 

பொற்கரங்கள் அருள்கூட்டும் 
நம்மை பற்றி வரும் துயர் விரட்டும் 
நெற்றியிலே அணிநீறும் 
என்றும் வெற்றிப் பாதையைக் காட்டும்
ஆ குலம் காத்தருள் செய்தவரே 
வேத ரூபி மஹா பெரியவரே 
ஆயிரம் நாமங்கள் கொண்டவரே 
தாயாம் சந்திர சேகரரே ( ஜய ஜய ) 

தண்ட கமண்டலம் ஏந்திய கரமும் 
என்றும் தர்மம் எதிலும் விளங்கும் 
கருணை உருவாக வந்து நிற்பார் அம்மா... 
கருணை உருவாக வந்து நிற்பார் 
குவலயம் விளங்கிட காத்து நிற்பார் 
மங்கள வாழ்வையும் தந்திடுவார் 
சம்புவும் சங்கரம் ஒன்றெனவே 
ஜகத்குரு சந்திர சேகரரே 
ஜயஜய சங்கர ஹர ஹர சங்கர சந்திரசேகர சரணம் 
ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கர ஜகத்குரு சங்கர சரணம் 
காஞ்சி ஜகத்குரு சங்கர  சரணம் 

Wednesday, 3 February 2021

வரம் ஒன்று தந்தருள்வாய்

 வரம் ஒன்று தந்தருள்வாய்! வடிவேலா!                                                                         வரமொன்று தந்தருள்வாய்! --எங்கள்                                                     

மரகத மாமயிலேறும் ஆறுமுக வடிவேலா         (வரமொன்று)

அனுபல்லவி
பரம்” என்ற சொல்லுக்கொரு பொருளே! --பரத்தில்                                     பரம் என்ற சொல்லுக்கொரு பொருளே!---இளம்                                          பச்சைக்கும் இச்சைக்கும் நடுப் பொருளே!                                                 
பல பொருள் கேட்டுனை அது இது எனாது                                                                 
பட்டென்று ஒரு பொருள் கேட்டிடுவேன் அந்த       (வரமொன்று)

சரணம்
பொன்னும் மணியும் எந்தன் புத்தியிலே பட்டவை--                                        புளித்துப் புளித்துப் போச்சே!--- ஏனென்றால் உந்தன்                                     புன்னகை முகம் கண்டதால் ஆச்சே!
இன்னும் உலகமுறும் இன்பம் என்றவை---                                                                   
எப்படியோ மறந்து போச்சே! ஏனென்றால் உன்                                               ஏறுமயில் நடம் கண்டதாலாச்சே!
முன்னும் மனம் உருக முருகா முருகா” என்று                                                          மோஹமீறித் தலை சுற்றலாச்சே!-- சொல்ல வந்த                                                   
மொழி கூட மறந்துதான் போச்சே!
பொன்னார் மேனியன் காதில் சொன்னாயே (ஏதோ)--அந்தரங்கம்                                      போதும் என்று கேட்கவும் ஆசை ஆச்சே

மத்யம காலம்
புனிதமான அறுபடை வீடுடையாய்!  புகு மதக்களிறு நடையுடையாய்!
இனித்த நறு வைங்கலவை அதனினும்-- இனித்த தினையினைச் சுவையுடையாய்!
எனக்கும் ஒரு பதம் தந்தருள மணமணக்க வரு  தமிழருளுடையாய்
அன்னையினும் சிறந்ததான அருளொடு நிறைந்ததான அறுமுக வடிவேலா
(வரமொன்று)

Tuesday, 2 February 2021

ராமஜெயம்

 https://m.facebook.com/story.php?story_fbid=3697827673611758&id=100001536868201